RECENT NEWS

பிளக்ஸ் பேனர் மீது மின்கம்பி உரசி, தொழிலாளி பலி
உரிமம் இன்றி டூ வீலர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன்.. தந்தை மீது போலீஸ் நடவடிக்கை..!

Jan 17, 2025

110

உரிமம் இன்றி டூ வீலர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன்

தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறியதாக 40,000 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து

Sep 30, 2024

587

சாலை விதிகளை மீறியதாக தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை 40 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சாலை விபத்துகளில் பத்தாயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றதாக ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 97 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியதாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 624 வழக்குகளும், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 777 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாக 35 லட்சத்து 78 ஆயிரத்து 763 வழக்குகளும், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 3 லட்சத்து 39 ஆயிரத்து 434 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக 76 லட்சத்து 16 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளன.விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியதாக ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 375 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரை செல்ஃபோன் பேசியபடி ஓட்டியதாக பைக் ரேசர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு

May 30, 2024

376

யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி அவர் கார் ஓட்டியதாக ஆயுதப்படை காவலர் மணிபாரதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன்பேரில் அண்ணாநகர் காவல்துறையினர் TTF வாசனைப் பிடித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இரு கைகள் தான் இல்லை.. நெஞ்சமெல்லாம் தன்னம்பிக்கை.. மாஸாக கார் ஓட்டும் இளைஞர்..! ஆர்.டி.ஓவிடம் ஓட்டுனர் உரிமம் பெற்றார்

Apr 29, 2024

387

சென்னை வியாசர்பாடியில் மின்சார விபத்தில் இருகைகளை இழந்த இளைஞர் ஒருவர் விடாமுயற்சியுடன் கார் ஓட்டக் கற்றுக் கொண்டு. சொந்தமாக கார் ஒன்றை வாங்கி தனக்கு ஏற்றவாறு வடிவமைத்து ஓட்டுனர் உரிமமும் பெற்றுள்ளார் முழங்கை முட்டிக்கு கீழ் முழுமையாக இரு கைகளும் இல்லை.. ஆனால் நெஞ்சமெல்லாம் தன்னாலும் முடியும் என்ற தன்னம்பிக்கை நிறைந்து கிடந்ததால் இரு கைகளும் இல்லாமல்.. கால்விரலால் காரை ஸ்டார்ட் செய்து... கார் ஓட்டும் தான்சேன் இவர் தான்..!சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தான் சேன், 10 வயதாக இருக்கும் போது மின்சார விபத்தில் சிக்கி இரு கைகளையும் இழந்துள்ளார். தான்சேன் வளர்ந்து பெரியவனானதும் மற்றவர்களை போல தான் கையால் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆவல் இருந்துள்ளது. இதனையடுத்து கை இல்லாத மாற்றுத்திறனாளிகள் எப்படி கார் ஓட்டுகிறார்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப தீவிட முயற்சிகளை கையாண்டுள்ளார்அதன்படி கார்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப மறு உருவாக்கம் செய்து தரும் சங்கர் என்பவரை அனுகி உள்ளார். அவரும் முழுமையான கைகள் இல்லாமல் காரை எளிதாக இயக்கும் வகையில் ஸ்டியரிங் உடன் சேர்ந்து கை போன்ற ஒரு அமைப்பை பொறுத்திக் கொடுத்தார். அதனுள் தனது பாதி கையை பொறுத்திக் கொண்டு அசால்ட்டாக கார் ஓட்ட ஆரம்பித்தார் தான் சேன்மேலும் இடது பக்கம் இண்டிகேட்டர் ஹெஅட் லைட் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு என்று தனியாக சுவிட்ஜ்களை வைத்துக் கொடுத்துள்ளதாலும், ஆட்டோ மெடிக் கியர் கொண்டதாகவும் இருப்பதல் எவ்வித சிரமமும் இன்றி தான்சேன் காரை ஓட்டிச்செல்கிறார்தான்சேன் கார் ஓட்டுவது விடாமுயற்சியின் வெற்றி என்றால் அவரது கார் ஓட்டும் முயற்சிக்கு தன்னுடைய மறு உருவாக்கத்தால் கை கொடுத்த சங்கரின் கரங்கள்.. உண்மையிலேயே உதவும் கரங்கள் தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..!

வாகனப் பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் வீடு தேடி வரும்

Feb 28, 2024

552

வாகன பதிவுச்சான்று, ஒட்டுநர் உரிமம் ஆகியவற்றை விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழகத்தின் 91 வட்டார போக்குவரத்து மற்றும் 54 பகுதி அலுவலகங்களில் ஒப்பளிக்கப்படும் வாகன பதிவுச் சான்று மற்றும் ஒட்டுநர் உரிமம் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என்றும் நேரில் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த நடவடிக்கையால் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகங்களுக்கு மக்கள் நேரடியாக வருவது கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TTF வாசனுக்கு 10 ஆண்டுகள் பைக் ஓட்ட தடை..! மஞ்சள் வீரனும் கைவிடப்படுகிறது..!

Oct 08, 2023

23345

பைக் யூடியூப்பர் டிடிஎப் வாசனுக்கு ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால்,அவர் பைக் ரேசராக நடிக்கின்ற மஞ்சள் வீரன் படத்தை தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்து பல்டி அடித்து விபரீத விபத்தில் சிக்கி புழல் சிறையில் கம்பி எண்ணி வருபவர் டிடிஎப் வாசன்..!கையில் சூலத்துடன் மஞ்சள் வீரன் போஸ்டர் வெளியிட்ட கொஞ்ச நாளிலேயே சாகசம் செய்வதாக நினைத்து சொந்த பைக்கால் சூனியம் வைத்துக் கொண்டார் வாசன் என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் கீழ் கோர்ட்டு மேல் கோர்ட்டு என மனுவுக்கு மேல் மனு செய்து... நீதிமன்றத்தால் நச் என்று தலையில் குட்டு வாங்கியதோடு சரி... ஜாமீன் எங்கேயும் கிடைக்கவில்லை. இதனால் வாசன் நடித்து வந்த மஞ்சள் வீரன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.இந்த நிலையில் டிடிஎப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக போக்குவரத்து துறை அறிவித்து அவரது தலையில் இடியை இறக்கி உள்ளது. 280 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி ரசிகர்களை கவர்ந்த தங்கத்தால், இனி வரும் காலங்களில் ஹயபுசா இல்லை, காயலான் கடை மொபட் கூட ஓட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.கோர்ட்டு கேஸூ எல்லாம் சாதாரணம்... யூடியூப்பில் லட்சக்கணக்கில் வருமானம் வருது பார்த்துக்கலாம்.. என்று ஆட்டம் போட்ட வாசன் இந்த முறை வசமாக சிக்கி இருக்கிறார். இனி அவர் சைக்கிள் மட்டுமே ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் நடித்து வரும் மஞ்சள் வீரன் படம் பாதியில் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுபடத்தில் பைக் ரேசராக நடிக்கும் வாசன் படப்பிடிப்பு தானே என்று பைக்கில் ஏறினால் கூட போலீசார் இனி கூப்பிட்டு வைத்து வழக்கு போடுவார்கள் என்றும் அதனால் எதற்கு வீண் வம்பு என்று படக்குழு நினைப்பதாகவும் கூறப்படுகின்றது. தரையில் ஆடி ஸ்லிப்பானாலே மாவுக்கட்டு உறுதி, தங்கம் தலைக்கனத்தில் பைக்க வச்சிகிட்டு ரைடு என்று தாறுமாறாக ஆடியதால், லைசன்ஸை ரத்து செய்து எண்டு கார்டு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவிப்பு

Oct 07, 2023

2475

டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து10 ஆண்டுகளுக்கு ரத்து என அறிவிப்புதமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்புடிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவிப்புகாஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில், கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வீலிங் செய்து டிடிஎஃப் வாசன் விபத்துக்குள்ளானார்பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை அதிவேகத்தில் இயக்கிய குற்றச்சாட்டில் டிடிஎஃப் வாசன் கைதானார்இதையடுத்து டிடிஎஃப் வாசனின் லைசென்சை ரத்து செய்யுமாறு, போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்திருந்ததுடிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவிப்பு

ரூ.5 ஆயிரம் அபராதமா..! சம்பளமே ரூ.12000 தான் கொஞ்சம் யோசிங்க சார்..! காவல்துறையின் சூறாவளி வசூல்

Oct 28, 2022

4886

சென்னை எழும்பூரில் தலைகவசம், வாகன ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞருக்கு ஒட்டு மொத்தமாக போலீசார் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் சாலையில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசாரிடம் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்த இளைஞர் ஒருவர் சிக்கினார்.ஹெல்மெட்டுக்கு அபராதம் கட்டிட்டு சென்று விடலாம் என்று நினைத்தவரிடம், வாகன ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா ? என்று கேட்க தன்னிடம் எல்.எல்.ஆர் தான் உள்ளது என்றார் அந்த இளைஞர்.எல்.எல்.ஆர் வைத்துக் கொண்டு சாலையில் வாகனம் ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்திய போலீசார் அபராதமாக 5 ஆயிரம் ரூபாயை கட்டச்சொன்னதால் அதிர்ச்சி அடைந்தார்தனக்கு மாதச்சம்பளமே 12 ஆயிரம் ரூபாய் தான் , 5 ஆயிரம் அபராதம் கட்டச்சொன்ன எப்படி சார் ?, கொஞ்சம் யோசிங்க சார் என்று அந்த இளைஞர் கெஞ்சினார்அந்த இளைஞர் கெஞ்சிக் கொண்டிருந்த போதே மெஷினில் இருந்து இருந்து அபராத ரசீதை காவல் உதவி ஆய்வாளர் எடுத்ததால் அதிர்சிக்குள்ளாகி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த இளைஞர்அதே போல அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த மற்றொரு வாகன ஓட்டி போக்குவரத்து போலீசுக்கு அபராத காணிக்கையாக 1000 ரூபாயை அள்ளிக் கொடுத்து விட்டுச்சென்றார்.

மும்பை விமான நிலையத்தில் கேரள பயணியிடம்  80 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் பறிமுதல்

Oct 06, 2022

3001

மும்பை விமான நிலையத்தில் கேரளாவை சேர்ந்த பயணியிடம் இருந்து 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் போதை பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து பயணி கொண்டு வந்த டிராவல் பையையில் சோதனை நடத்திய போது அதில் போதை பொருளை  மறைத்து கொண்டு வந்ததை  கண்டுபிடித்தனர்.

வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளவற்றைப் புதுப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31, இனி நீட்டிப்பு இல்லை - மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

Oct 15, 2021

4457

வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்டுள்ள அவகாசம், வரும் 31ம் தேதிக்குப் பின் நீட்டிக்கப்படாது என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஏழு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.இந்நிலையில், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வாகன ஆவணங்களைப் புதுப்பிக்க, வரும் 31ம் தேதிக்குப் பின் அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

8 போடாமல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் மத்திய அரசின் உத்தரவு குறித்து ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

Jul 05, 2021

3835

ஓட்டுநர் உரிமம் பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 8 வடிவில் வாகனம் ஓட்டிக் காட்ட வேண்டாம் என்கிற மத்திய அரசின் உத்தரவு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவெடுக்கப்படும் எனத் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நாளை முதல் குளிர்சாதன வசதிப் பேருந்துகளைத் தவிர அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என கூறினார். போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை உள்ளதாகவும், பத்தாயிரம் பேரை வேலைக்கு எடுக்க வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பாக, வீட்டு வசதித்துறை அமைச்சருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.   

BIG STORIES

ஃபுல்லா கிரிமினல் மூளை கல்லூரி மாணவியை உரிக்க காத்திருந்தவனுக்கு டுவிஸ்ட்..! நம்ம போலீஸ் கெத்து தான்ம்பா..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News