குடிநீர் கட்டணம் உயர்வு- அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Mar 13, 2025
26
குடிநீர் கட்டணம் உயர்வு- அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சிவகாசியில் மன்னராட்சி நடக்கிறதா? - திமுக கவுன்சிலர்கள் ஆவேசம்
Mar 11, 2025
27
சிவகாசியில் மன்னராட்சி நடக்கிறதா? - திமுக கவுன்சிலர்கள் ஆவேசம்
வேலூரில் ஆவணங்களை காண்பிக்க மறுத்து போலீஸாருடன் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வாக்கு வாதம்
Oct 05, 2024
734
வேலூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தனது காருக்கான ஆவணங்களை காண்பிக்க மறுத்த அகரத்தைச் சேர்ந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சுதாகர் என்பவர் அந்த காரை அப்படியே நடு ரோட்டில் நிறுத்தினார்.இதனால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படவே போலீஸாருக்கும் சுதாகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தி.மு.க அஞ்சுகம் கணேசனை எதிர்த்து, அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே பேரூராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு
Oct 01, 2024
484
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவரான திமுகவைச் சேர்ந்த அஞ்சுகம் கணேசனை மாற்றக் கோரி, அதே கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே பேரூராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.தங்களது வார்டுகளில் சரிவர பணிகள் நடப்பதில்லை என்றும் மனித நடமாட்டமே இல்லாத இடங்களில் பல கோடி ரூபாயில் பணிகள் நடைபெறுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியதால், அஞ்சுகம் கணேசனும் பாதியில் எழுந்து சென்றார்.
சாலை தரமாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் திமுக கவுன்சிலர் ஆவேசம்..! வேலையை விட்டே செல்கிறேன் - அதிகாரி
Sep 26, 2024
1323
திருவொற்றியூர் நெய்தல் நகரில் மழை பெய்த அரை மணி நேரத்தில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலைப்பணிகளை தடுத்து நிறுத்திய கவுன்சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிகாரி ஒருவர் , உதவி ஆணையரின் ஆய்வின் போது முன்னுக்குப்பின் முரணாக பேசி சிக்கிக்கொண்டதால் , தான் வேலையை விட்டே போகிறேன் என்று கதறும் நிலைக்கு தள்ளப்பட்டார்பெருநகர சென்னை மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் விம்கோ நகர் நெய்தல் நகர் பகுதியில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை முதலிலே மழை பெய்து வந்த நிலையில் 7:30 மணி வரை மழை பெய்து ஓய்ந்தது . காலை 8 மணி அளவில் அங்கு புதிய சாலை அமைக்க பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றதுஅப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் அங்கு வந்த 5 வார்டு திமுக கவுன்சிலர் சொக்கலிங்கம், மழை பெய்து வரும் நிலையில் எதற்காக தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணியை செய்தீர்கள் என மாநகராட்சி உதவி பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனையும் மீறி 25 மீட்டர் வரை புதிய சாலையை அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மண்டல குழு கூட்டத்தில் இது குறித்து பேசிய கவுன்சிலர் சொக்கலிங்கம் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.மழை நேரத்தில் போடப்பட்ட சாலையின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் சாலை தரமாக இல்லை என்றால் உடனடியாக சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மீதும் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் பாபு, மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . சாலை தரமாக இருந்தால் எனக்கு தூக்கு தண்டனை கூட கொடுங்கள் என்றும் ஆவேசமாக பேசினார்.இதனை அடுத்து புதிதாக சாலை போடப்பட்ட இடத்தை திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் சுரேஷ் , மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாபுவுடன் வந்து சாலையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் . அப்போது சாலை அமைக்க அனுமதி கொடுத்த உதவி செயற்பொறியாளர் பாபு , இனி சாலை போடும் இடத்திற்கே நான் வரமாட்டேன் வேலையை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு வெளியேறினார்பின்னர் அவரை சமாதானப் படுத்திய உதவிய ஆணையர் சுரேஷ் 14 வார்டுகளிலும் பணிகளை பார்வையிட வேண்டும் என்றால் நான் ரோபோ ரஜினி ஆக தான் இருக்க வேண்டும் என நகைச்சுவையாக பேசினார் . பின்னர் சாலையின் தரத்தை ஆய்வு செய்வதற்கென்று மாநகராட்சி குழு இருப்பதாகவும் அவர்களுக்கு தகவல் அளித்து சாலையை தரமாக இருக்கிறதா என்று ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்கோபமாக இருந்த கவுன்சிலர் சொக்கலிங்கத்தை, கூல் செய்வதற்காக நான் கலெக்டராக வரும் பொழுது நீங்கள் சட்டமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இருப்பீர்கள் என்று கூறி சமாதானப்படுத்தினார்
தென்காசியில் நகராட்சி அனுமதியின்றி தி.மு.க கவுன்சிலர் நடத்திய டூவிலர் பார்க்கிங் கூடத்திற்கு சீல்
Aug 22, 2024
524
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய தற்காலிக பேருந்து நிலைய வளாகம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் நடத்தி வந்த டூவீலர் பார்க்கிங் கூடத்திற்கு நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் தரப்பினர், நகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
கோவைக்கு புதிய மேயர்.. இலவு காத்த கிளிகளான கவுன்சிலர்கள் கண்ணீர்..! ஆதங்க குரலை அடக்கிய அமைச்சர்கள்
Aug 06, 2024
632
கோவை மாநகராட்சியின் புதிய மேயராக 29- வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேயர் பதவி கிடைக்கும் எனக் காத்திருந்த தி.மு.க பெண் கவுன்சிலர்கள் கண்ணீர் விட்டு அழுதும், ஆவேசமாக பேசியும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.கோவை மாநகராட்சியின் மேயர் பதவியை கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அடுத்த மேயர் தாங்கள் தான் என்று கவுன்சிலர்கள் மீனா லோகு, லட்சுமி இளஞ்செல்வி, சாந்தி முருகன்ஆகியோர் எதிர்பார்ப்பில் காய்களை நகர்த்தி வந்தனர். காளப்பட்டியில் நடந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி தலைமையிலான கூட்டத்தில் 29 வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி பெயர் புதிய மேயர் என்று அறிவிக்கப்பட்ட போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது மீனா லோகு கண்ணீர் விட்டு அழுதபடியே அங்கிருந்து புறப்பட்டார்.மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு முன்னதாக தனியார் பள்ளி கூடத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி தலைமையில் கவுன்சிலர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் கவுன்சிலர் சாந்தி முருகன் எழுந்து ஆதங்கத்தை கொட்டினார்.இதையடுத்து புலம்பி அழுதபடியே வெளியில் வந்த சாந்திமுருகனை சக பெண் கவுன்சிலர்களும், அவரது கணவரும் தோளில் தட்டி சமாதானப்படுத்தினர்.அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டபோது, அமைச்சர்கள் இருக்கிறார்கள் பேசவேண்டாம் என்று விடாமல் அழைத்துச் சென்றனர்.தொடர்ந்து மறைமுக தேர்தலில் கோவை மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, செங்கோல் வழங்கி மேயர் நாற்காலியில் அமைச்சர்கள் அமர வைத்தனர். அப்போது தி.மு.க கவுன்சிலர்கள் வேறு வழியின்றி சோகம் தோய்ந்த முகத்துடனே சென்று கோவையின் 2ஆவது பெண் மேயரான ரங்கநாயகிக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
டெல்லி மாநகராட்சி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு... 10 நியமன கவுன்சிலர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம்
Aug 05, 2024
409
டெல்லி மாநகராட்சி கவுன்சிலில் 10 நியமன உறுப்பினர்களை அமர்த்த துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநகராட்சியில் தேர்தல் மூலம் 250 கவுன்சிலர்களும் 10 நியமன உறுப்பினர்களும் இருப்பது நடைமுறையாக உள்ளது.தற்போது மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 134 பேரும், பாஜகவிற்கு 104 பேரும் உள்ளனர். இந்த நிலையில் நியமன உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி சபையை சீர்குலைக்க முயற்சி நடக்கலாம் எனக்கூறி ஆளுநரின் அதிகாரத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.கடந்த ஆண்டில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஆளுநருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மேயர் வேட்பாளராக தி.மு.க கவுன்சிலர் கிட்டு (எ)ராமகிருஷ்ணன் அறிவிப்பு
Aug 04, 2024
412
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக தி.மு.க கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்துள்ளனர். நெல்லை மேயராக இருந்த பி.எம்.சரவணன், பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாளை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் கவுன்சிலர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாநகராட்சியின் 25 வது வார்டு உறுப்பினரான ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் முன்னாள் கவுன்சிலர் மீது கோயிலுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
Jul 27, 2024
433
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நேற்று இரவு மாசிலாமணி நாதர் கோவிலுக்குள் வைத்து, பொறையார் ரோட்டரி சங்க தலைவரும், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலருமான அருண்குமார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சித்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நேற்று இரவு 10 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் வழக்கபோல் விளக்கு ஏற்றச் சென்ற போது தீ வைக்கப்பட்டதில் கூச்சலிட்ட அருண்குமாரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டனர். 65 சதவீத தீக்காயத்துடன் அருண்குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.ஒரு ஆள் மட்டுமே நுழையும் அளவு குறுகிய நுழைவாயில் கொண்ட கர்பகிரகத்திற்குள் நுழைந்து தீவைக்கப்பட்ட சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா? தொழில் போட்டி காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க கவுன்சிலர் கைது
Jul 17, 2024
343
நகராட்சி கமிஷனர் அறையில் புகுந்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக ஆற்காடு நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். 28 ஆவது வார்டு கவுன்சிலரான உதயகுமார், நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சஸ்பென்ட் செய்யப்பட்டார்.இதனைக் கண்டித்து கமிஷனர் அறைக்குள் பாட்டிலில் பெட்ரோலையும், கையில் தூக்குக் கயிறையும் எடுத்துச் சென்றது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் சண்முகம் கொலையில் தி.மு.க. கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் கைது ; 3 பேருக்கு வலை
Jul 04, 2024
380
சேலம் கொண்டலாம்பட்டி அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் சண்முகம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க. கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் கைது செய்யப் பட்டனர்.முன்னதாக, தாதகாப்பட்டியில் புதனன்று சண்முகத்தை வெட்டிக் கொன்ற குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இதனிடையே, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரு விளக்குகளை துண்டித்தும், சிசிடிவி கேமராக்களை உடைத்தும் திட்டமிட்டு கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கவுன்சிலர்ன்னா சும்மாவா... ஆக்கிரமிப்பை அகற்றியவரை தாக்கிய மதிமுக கவுன்சிலர்..! நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஷாக்
Jul 02, 2024
792
சென்னை ஈக்காட்டு தாங்கலில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி ஓட்டுனரை, மதிமுக கவுன்சிலர் விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்ப்பட்டதுஆக்கிரமிப்பை அகற்ற ஜே.சி.பியுடன் வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியரை மதிமுக கவுன்சிலர் தாக்கிய காட்சிகள் தான் இவை..!சென்னை ஈக்காட்டுதாங்கல் 100 அடி சாலையில் 167 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்த ஜே.சி.பி ஓட்டுனரை, பெருநகர சென்னை மாநகராட்சியின் 139 வார்டு மதிமுக கவுன்சிலர் சுப்பிரமணி என்பவர் தரக்குறைவான ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், விரட்டி விரட்டி தாக்கியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளகளில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியதுஇந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் போலீசில் அளிக்கப்பட்டாத நிலையில் மதிமுக கவுன்சிலர் சுப்பிரமணி கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 27 ஆம் தேதி தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்துக்கு இடையூறாக ஜேசிபி வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது என்றும், அதனை எடுக்கும்படி கூறிய போது ஜேசிபி ஓட்டுனர் அவதூறாக பேசியதால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும், அதனை யாரோ வீடியோ எடுத்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.ஜே.சி.பி ஓட்டுனரை தாக்கியதோடு மட்டுமில்லாமல், தான் தாக்கிய காட்சியை வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடமே ஒப்புதல் வாக்குமூலம் போல புகார் அளித்த கவுன்சிலர் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடைபாதையை யார் ஆக்கிரமித்தாலும் கவுன்சிலர் தான் முதல் கைது: மம்தா எச்சரிக்கை
Jun 28, 2024
603
நடைபாதை போன்ற பொது இடங்களில் ஆக்கிரமிப்பு நடந்தால், முதலில் அந்த வார்டு கவுன்சிலர் தான் கைது செய்யப்படுவார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அம்மாநிலத்தில் ஆக்கிரமிப்பு புகார்கள் அதிகரித்ததால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட மம்தா, அது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.அதில் பேசிய அவர், பிழைப்புக்காக ஏழைகள் பொது இடத்தில் கடை போட்ட காலம் மாறி, ஆக்கிரமிப்புகள் பெரிய அளவில் தொழிலாக வளர்ந்துள்ளதாக கூறினார்.அதிகாரிகள், போலீசார், அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் எந்த ஆக்கிரமிப்பும் நடக்க முடியாது என குறிப்பிட்ட மம்தா, இந்த விஷயத்தில் கட்சி பேதம் பார்க்கப்படுவதில்லை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான் என விமர்சித்தார்.
கடலூரில் விஷச்சாராய சாவுகளுக்கு மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்ட கவுன்சிலர்கள்
Jun 28, 2024
442
கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் தொடங்கியதும், சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்காதது ஜனநாயகப் படுகொலை என அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.பதிலுக்கு திமுக கவுன்சிலர்கள் எழுந்து சாராய சாவுகளுக்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் எனக் கூறினர். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதிமுக, திமுக கவுன்சிலர்கள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது, இடையில் புகுந்த பாமக கவுன்சிலர் ஒருவர், தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகியதற்கு இரண்டு கட்சிகளுமே காரணம் எனக் குற்றம்சாட்டினார். அப்போது அவரிடமிருந்து அதிமுக கவுன்சிலர் மைக்கை வாங்க முயன்றார். பாமக கவுன்சிலர் கொடுக்க மறுக்கவே, அதிமுக கவுன்சிலர் மைக்கை வெடுக்கென்று பறித்தார்.
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News