RECENT NEWS

பிளக்ஸ் பேனர் மீது மின்கம்பி உரசி, தொழிலாளி பலி
சென்னை அருகே அடுக்குமாடிக் குடியிருப்பின் இரும்பு கேட் சரிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

சென்னை அருகே அடுக்குமாடிக் குடியிருப்பின் இரும்பு கேட் சரிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

Feb 14, 2025

126

சென்னை அருகே அடுக்குமாடிக் குடியிருப்பின் இரும்பு கேட் சரிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

சிலி நாட்டில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ - குடியிருப்புகள் சேதம்

சிலி நாட்டில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ - குடியிருப்புகள் சேதம்

Feb 13, 2025

38

சிலி நாட்டில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ

பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த  7 பேர் உயிரிழப்பு ,13 பேர் உயிருடன் மீட்பு - தொடரும் மீட்பு பணி..

பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த 7 பேர் உயிரிழப்பு ,13 பேர் உயிருடன் மீட்பு - தொடரும் மீட்பு பணி..

Oct 23, 2024

990

பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த விபத்திற்கு, 4 மாடி கட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு 7 மாடி வரை கட்டியதே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூருவில் கனமழை பெய்து வரும் நிலையில் ஹோரமாவு அகாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று மதியம் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் 20 க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் 7 பேர் சடலமாகவும், 13 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் தெரிவித்தார்.ஹனி, பிராடி என்ற இரண்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

சென்னை அருகே பல அடி ஆழம் உள் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங்

சென்னை அருகே பல அடி ஆழம் உள் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங்

Oct 16, 2024

769

சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதி பல அடி ஆழத்திற்கு உள் வாங்கிய நிலையில் அந்த இடத்தை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து அங்கிருந்து மாதிரி படிவுகளை சோதனை செய்ய எடுத்துச் சென்றுள்ளனர்.சோதனையின் முடிவில் தான் தரைப்பகுதி உள்வாங்கியதற்கான காரணம் குறித்தும் அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் தெரியவரும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை..!

அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை..!

Sep 06, 2024

543

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் மின்கசிவால் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த நபிலன் என்ற ஒரு வயது குழந்தையும் மிதிலன் என்ற 3 வயது குழந்தையும் உயிரிழந்தன. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். குழந்தைகளின் பெற்றோரான பிரேம்குமார்-மஞ்சுளா தம்பதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருத்தணியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மின்கசிவு... தீ விபத்தில் 3 பேர் காயம்

திருத்தணியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மின்கசிவு... தீ விபத்தில் 3 பேர் காயம்

Sep 06, 2024

588

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் மின்கசிவால் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் நபிலன்என்ற ஒரு வயது குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தது.பிரேம்குமார்-மஞ்சுளா தம்பதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், மூன்று வயது குழந்தை மிதிலன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் வீட்டின் மேல்பூச்சு இடிந்து விழுந்ததில்  டி.. வி., செல்போன் உள்ளிட்ட பொருட்கள் சேதம்

சென்னையில் வீட்டின் மேல்பூச்சு இடிந்து விழுந்ததில் டி.. வி., செல்போன் உள்ளிட்ட பொருட்கள் சேதம்

Aug 15, 2024

356

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மலையப்பன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வரும் வீட்டின் மேல் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததில், டி.. வி., செல்போன் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. மேல்பூச்சு இடிந்து விழுந்தபோது மலையப்பனின் இரண்டாவது மகன் கழிவறைக்கு சென்றிருந்ததால் அவர் காயமின்றி  உயிர்தப்பினார்.

அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்த ஹமாஸ் தளபதி...

அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்த ஹமாஸ் தளபதி...

Jun 21, 2024

550

ஹமாஸ் தளபதி ஒருவரை துல்லிய தாக்குதல் நடத்திக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7- ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுபவர் அகமது ஹஸான். தொலைதூரத்தில் இருப்பவர்களை குறி பார்த்து சுட உதவும் ஸ்னைப்பர் ரைபிள் வைத்துள்ள ஹமாஸ் போராளிகளுக்கு, அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்தபடி, அகமது ஹஸான் உத்தரவுகளை பிறப்பித்து வந்ததாக கூறப்படுகிறது..பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் போர் விமானம் மூலம் துல்லியமாக ஏவுகணை வீசி அகமது ஹஸானைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைக்கப்பட்டிருந்த 4 பிணையக்கைதிகளை மீட்ட இஸ்ரேல் ராணுவம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைக்கப்பட்டிருந்த 4 பிணையக்கைதிகளை மீட்ட இஸ்ரேல் ராணுவம்

Jun 10, 2024

509

ஹாமாஸின் கடும் தாக்குதலுக்கு மத்தியில், ஒரு பெண் உள்பட 4 பிணைக்கைதிகளாக பட்டப்பகலில் காஸாவில் இருந்து மீட்டுவந்த காணொளியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சிறை வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிகளை, பல வாரங்களாக கண்காணித்து, அவர்களை மீட்க பிரத்யேக பயிற்சி மேற்கொண்டதாகவும், பின் ஹமாஸ் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக நுழைந்து பிணைக்கைதிகளை மீட்டு ஹெலிகாப்டரில் அழைத்துவந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமையன்று நடந்த இந்த மீட்பு நடவடிக்கையின்போது, இஸ்ரேல் விமானங்கள் பொழிந்த குண்டு மழையில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்பு செய்ததாக நடிகர் சரத்குமாருக்கு எதிராக தனுஷின் தாய் வழக்கு.. நீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பை அளவிட்ட மாநகராட்சி அதிகாரிகள்

ஆக்கிரமிப்பு செய்ததாக நடிகர் சரத்குமாருக்கு எதிராக தனுஷின் தாய் வழக்கு.. நீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பை அளவிட்ட மாநகராட்சி அதிகாரிகள்

Jun 07, 2024

553

சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் மாடிப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் சரத்குமாருக்கு எதிராக நடிகர் தனுஷின் தாய் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு படி சம்மந்தப்பட்ட இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்தனர்.மாடி, கார் பார்க்கிங், சரத்குமார் வசிக்கும் தரைத்தளத்தை அளவீடு செய்த நிலையில், ஆக்கிரமிப்பு பகுதிகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேசமயம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட மொட்டை மாடியை வேறு ஒரு நபருடன் சேர்ந்து வணிகரீதியாக பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை சரத்குமார் தரப்பு மறுத்துள்ளது.

நடிகர் சரத்குமார் அடுக்குமாடி குடியிருப்பின் பொது பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் தனுஷின் தாய் புகார்

நடிகர் சரத்குமார் அடுக்குமாடி குடியிருப்பின் பொது பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் தனுஷின் தாய் புகார்

Jun 05, 2024

835

சென்னை தி நகரில் உள்ள கோல்டன்அப்பார்ட்மெண்டில், குடியிருப்புவாசிகளுக்கு பொதுவான மாடிப் பகுதியை தரைத்தளத்தில் வசிக்கும் நடிகர் சரத்குமார் ஆக்கிரமித்து வணிக ரீதியாக பயன்படுத்துவதாக அதில் வசித்து வரும் நடிகர் தனுஷின் தாய் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

பலத்த காற்றுடன் கனமழை தொகுப்பு வீடுகளின் சிமெண்ட் மேற்கூரை பறந்ததால் மக்கள் பாதிப்பு...

பலத்த காற்றுடன் கனமழை தொகுப்பு வீடுகளின் சிமெண்ட் மேற்கூரை பறந்ததால் மக்கள் பாதிப்பு...

Jun 03, 2024

462

விழுப்புரம் அருகே உள்ள காணை குப்பம் கிராமத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்ததால் 10க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததுடன், சிமெண்ட் சீட்டுகள் காற்றில் பறந்ததன.மேலும் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

குடியிருப்பில் சுற்றிய காட்டுப்பூனையை பிடித்து கட்டி வைத்து செல்ஃபி எடுத்த இளைஞர்கள்

குடியிருப்பில் சுற்றிய காட்டுப்பூனையை பிடித்து கட்டி வைத்து செல்ஃபி எடுத்த இளைஞர்கள்

May 30, 2024

508

ஹைதராபாத் புறநகர் பகுதியான காஜலராமரம் அருகே காட்டுப்பகுதியையொட்டிய குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த பெரிய அளவிலான காட்டுப்பூனையை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிடித்தனர்.பார்ப்பதற்கு சிறுத்தை குட்டி போல காணப்படும் அந்த பூனையின் கால்களை கயிற்றால் கட்டி வைத்து இளைஞர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தகவலறிந்த வனத்துறையினர் விரைந்துச் சென்று அந்த பூனையை மீட்டனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் 4ஆவது மாடியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. பால்கனியில் தஞ்சமடைந்த குழந்தைகள், பெண்கள்..!

அடுக்குமாடி குடியிருப்பின் 4ஆவது மாடியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. பால்கனியில் தஞ்சமடைந்த குழந்தைகள், பெண்கள்..!

May 28, 2024

333

சென்னை துரைப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் உள்ள வீடு ஒன்றில் பற்றிய தீ, எதிர்வீட்டுக்கு பரவிய வாசல் பகுதி கொழுந்துவிட்டு எரிந்தது.இதனால் அந்த வீட்டில் இருந்த 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் வெளியே வர முடியாமல் பால்கனியில் தஞ்சமடைந்து உதவி கேட்டு குரல் எழுப்பினர்.இதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்து அங்கிருந்தவர்களை மீட்டனர்.

BIG STORIES

ஃபுல்லா கிரிமினல் மூளை கல்லூரி மாணவியை உரிக்க காத்திருந்தவனுக்கு டுவிஸ்ட்..! நம்ம போலீஸ் கெத்து தான்ம்பா..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News