பிளக்ஸ் பேனர் மீது மின்கம்பி உரசி, தொழிலாளி பலி
Mar 13, 2025
பிளக்ஸ் பேனர் மீது மின்கம்பி உரசி, தொழிலாளி பலி
Mar 13, 2025
பொழப்புக்கு வழி சொல்லவா.. வங்கியை கொள்ளையடித்து சிக்கிய நெல்லை இளைஞர்கள்..! மும்பை to நெல்லை வழி மங்களூர்
Jan 22, 2025
258
வங்கியை கொள்ளையடித்து சிக்கிய நெல்லை இளைஞர்கள்..!
நடிகர் சயீப் அலிகானுக்கு 6 முறை விழுந்த கத்திக்குத்து.. நள்ளிரவில் நடந்தது என்ன? கரீனா கபூரின் முகமெல்லாம் சிவந்தது..!
Jan 17, 2025
451
நடிகர் சயீப் அலிகானுக்கு 6 முறை விழுந்த கத்திக்குத்து
மகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்
Dec 04, 2024
67
ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரினார்.சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோரும் அப்போது உடன் இருந்தனர். இதன் மூலம் புதிய அரசு அமைப்பதில் கடந்த 11 நாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.முன்னதாக, மும்பையில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற தலைவராக ஒருமனதாக பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.மும்பை ஆசாத் மைதானத்தில் வியாழனன்று நடைபெறும் விழாவில் 3வது முறையாக முதலமைச்சராக பட்னாவிஸ் பதவி ஏற்க உள்ளார்.
அதிகாலை 2 மணிக்கு புறப்பட்ட ரயில்களில் ஏறிச்சென்றனர்.
Oct 16, 2024
523
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் , பாலக்காடு எக்ஸ்பிரஸ் , மும்பை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்பட்டுச் சென்றன.தெற்கு இரயில்வே நிர்வாகம் பயணிகளின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பியதால் மழை வெள்ளத்தை கடந்து கஷ்டப்பட்டு இரவோடு இரவாக ஆவடிக்கு வந்து சேர்ந்ததாக தெரிவித்தப் பயணிகள், அங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று குற்றஞ்சாட்டினர்
அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் சுட்டுக் கொலை.. மருத்துவமனைக்கு திரண்டன அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள்..
Oct 13, 2024
630
மும்பையில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். பாந்த்ரா கிழக்குப் பகுதியில் உள்ள தமது அலுவலகத்திற்கு சென்று வெளியில் வரும் போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.முகத்தை கைக்குட்டையால் மறைத்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் நெஞ்சிலும் வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த பாபா சித்திக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாபா சித்திக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அஜித் பவார் ஒருநல்ல நண்பரை இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.மருத்துவமனைக்கு நேரில் வந்த நடிகர்கள் சல்மான் கான், சஞ்சய் தத் ஆகியோர், பாபா சித்திக் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருங்கிப்பழகி இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தவர் பாபா சித்திக். சல்மான்கான்- ஷாருக்கான் இடையே ஏற்பட்ட விரிசலை சரி செய்து இருவரையும் நட்பில் இணைய வைத்து புகழ் பெற்றார். பாந்த்ரா தொகுதியில் 3 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
செல்லப்பிராணிகளுக்காக ரூ.165 கோடி மதிப்பில் மருத்துவமனை திறந்தவர் ரத்தன் டாடா
Oct 10, 2024
905
நாட்டிலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சையுடன் கூடிய அதிநவீன செல்லப்பிராணி மருத்துவமனையை திறந்தவர் தொழிலதிபர் ரத்தன் டாடா.சிறு வயதில் இருந்தே செல்லப்பிராணிகள் மீது குறிப்பாக நாய்கள் மீது அதிக விருப்பம் கொண்டவரான ரத்தன் டாடா, அவற்றின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.எத்தனையோ நிறுவனங்கள், அறக்கட்டளைகள் துவக்கி நடத்தினாலும், தன் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது டாடா டிரஸ்ட் சார்பில் 165 கோடி ரூபாய் செலவில் செல்லப் பிராணிகளுக்காக தான் தொடங்கிய சிறப்பு மருத்துவமனை தான்என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.தனது செல்லப்பிராணி நோய்வாய்பட்டதால், இங்கிலாந்து இளவரசர் கையால் பெற இருந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வை ரத்தன் டாடா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் வயது 86
Oct 10, 2024
1278
ரத்தன் டாடா காலமானார்பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ரத்தன் டாடாமும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது 86) காலமானார்டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த ரத்தன் டாடா 2012-ல் ஓய்வு பெற்றார்டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு காரணமாக எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் டாடாதொலைநோக்குப் பார்வையுள்ள தொழிலதிபர்- பழமையான மதிப்புவாய்ந்த நிறுவனங்களின் தலைவராக விளங்கினார்தொழில்துறையில் சாதனை படைத்தவர் டாடாபல சாதனைகளையும் தொழில்புரட்சியையும் நிகழ்த்தியவர் ரத்தன் டாடாஇந்தியப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார் டாடா1937-ல் குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த ரத்தன் டாடா 30 ஆண்டுகால கடும் உழைப்பிற்குப் பின் டாடா குழுமத் தலைவரானார்மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இரங்கல்ரத்தன் டாடாவின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்- ராஜ்நாத்சிங் இரங்கல்பத்ம விபூஷண் விருது பெற்றவர் டாடாரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளதுதொழிலதிபர்கள் இரங்கல்ரத்தன் டாடா மறைவுக்கு கவுதம் அதானி, ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்கள் இரங்கல்
கனமழையால் முடங்கியது மும்பை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Sep 26, 2024
585
மும்பையில் நேற்று 4 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்சேவை நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில்நிலையங்களில் காத்திருந்தனர்.10 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்த மழை காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளித்தன. பேருந்துசேவைகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.14 விமானசேவைகள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய விமானசேவையிலும் பல மணி நேர தாமதம் ஏற்பட்டது.மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வரை கன மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
"விந்தணு அல்லது கருமுட்டை தானம் கொடுத்தவர் குழந்தைக்கு உரிமை கோர முடியாது" - மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Aug 15, 2024
500
விந்தணு தானம் அல்லது கரு முட்டை தானம் செய்த நபர், பிறக்கும் குழந்தை மீது எந்த ஒரு உரிமையும் கோர முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பை பெண் ஒருவர், கருத்தரிப்பில் சிரமம் இருந்ததால், தங்கையிடம் இருந்து கரு முட்டைகளை தானம் பெற்று, வாடகை தாய் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றதாகவும், பின்னர் கருத்து வேறுபாடால், கணவர் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிரிந்து சென்று கருமுட்டைகளை தானம் தந்த தங்கையுடன் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.இருவரும் குழந்தைகளுக்கு உரிமை கோரிக் கொண்டு குழந்தைகளை பார்க்க தன்னை அனுமதிப்பதில்லை என அப்பெண் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, விந்தணு அல்லது கருமுட்டை தானம் செய்தவரோ, அல்லது வாடகை தாயாரோ பிறக்கும் குழந்தை மீது எந்த ஒரு உரிமையும் கோர முடியாது என தெரிவித்தார்.
மும்பை, புனேவை புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளம்... மழைக்கு 6 பேர் உயிரிழப்பு
Jul 26, 2024
445
மும்பை மற்றும் புனே நகரங்களில் கனமழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்தனர். மும்பையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான நிலையில் புனேவின் பர்வி அணை நீரில் மூழ்கி 3 பேர் பலியாகினர்.சான்டாக்ரூஸ் பகுதியில் 9 மணி நேரத்தில் 12 சென்டி மீட்டர் மழை பெய்தது. மும்பை மெரைன் ட்ரைவ், ஜுஹு கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.மழையால் பல விமானங்கள் தாமதமான நிலையில், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழை வெள்ளம் காரணமாக 80 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. புனேவின் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. உள்ளே சிக்கியவர்களை ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு முகாம்களுக்கு அனுப்பினர்.லவாசா நகரில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சொகுசு பங்களாக்கள் மண்ணில் புதைந்த நிலையில், மீட்புப் பணியில் NDRF வீரர்கள் ஈடுபட்டனர். மும்பை மற்றும் பல்கார் நகரங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையை மீண்டும் புரட்டிப் போட்ட கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
Jul 21, 2024
463
மும்பையில் மீண்டும் கொட்டிய கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாயின. தொடர்ந்து பெய்த மழையால் தாதர் கிழக்கு, மரைன் ட்ரைவ், லோயர் பரேல் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தால் போக்குவரத்து முடங்கியது.தண்ணீர் தேங்கியதால் அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. அமிர்தசரசில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க இயலாமல், அகமதாபாத் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.கனமழை நீடிப்பதால் மக்கள் வீடுகளைவிட்டு வெளிவர வேண்டாம் என்றும் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மும்பை போலீசார் அறிவித்தனர். இதற்கிடையே, மும்பை, ராய்காட், தானே, ரத்தினகிரி, சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மும்பையில் காரை மோதி பெண் உயிரிழப்பு... 3 நாட்களாக காதலி வீட்டிலும் ரிசாட்டிலும் பதுங்கி நபர் கைது
Jul 10, 2024
531
மும்பை வோர்லி பகுதியில் தாறுமாறாக பிஎம்டபிள்யூ காரை ஓட்டி 45 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதி உயிரிழக்க காரணமாக இருந்த மிஹிர் ஷா என்பவர் 3 நாட்களாக தேடப்பட்ட நிலையில் போலீசார் அவரைக் கைது செய்தனர்.விரார் பகுதியில் உள்ள ரிசாட்டில் பதுங்கியிருந்த அவர் செல்போனை நண்பர் பயன்படுத்திய போது காவல்துறையினர் அவர் இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். கடந்த 7ம் தேதி சிவசேனா கட்சி பிரமுகரின் மகனான மிஹிர் காரை மோதி பைக்கில் சென்ற பெண்ணை தரதரவென காருடன் இழுத்துச் சென்றதால் அந்தப் பெண் உயிரிழந்தார்.
மும்பையில் விடிய விடிய பெய்த பெருமழையால் விமானம், ரயில் மற்றும் சாலைகள் என ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்கின
Jul 08, 2024
476
மும்பையில் விடிய விடிய பெய்த பெருமழையால் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டன. கனமழையால் இரவு 2.20 மணி முதல் 3.40 மணி வரை 27 விமானங்கள் தரையிறங்க முடியாமல், அகமதாபாத், இந்தூர், ஐதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.இரவு 1 மணியில் இருந்து காலை 7 மணிக்குள் 30 சென்டி மீட்டர் மழை பெய்ததால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாகின. ரயில் பாதைகளில் வெள்ளம் புகுந்ததால் புறநகர் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நீண்ட தூர ரயில்கள் காலை முதல் மெதுவாக இயக்கப்படுகின்றன.சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் மும்பை நகரப் பேருந்துகளை இயக்கும் பி.இ.எஸ்.டி. நிறுவனம், பேருந்து போக்குவரத்தை நிறுத்தியது. வாகனங்களை இயக்க முடியாத அளவு சாலைகளிலும் சுரங்கப்பாதைகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் போக்குவரத்தும் முடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மும்பையில் மிதமானது முதல் கனமழை வரை தொடரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
திருத்தணியில் ரயிலில் சோதனை... மும்பையில் இருந்து 1,200 போதை மாத்திரைகளை ரயிலில் பறிமுதல் செய்த போலீசார்
May 30, 2024
280
சென்னை மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை மும்பை அதிவிரைவு ரயிலில் சென்னைக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி ரயில் நிலையம் வந்த மும்பை அதிவிரைவு ரயிலில் சோதனையிட்ட போலீசார், தயாளன்,மோனிஷ் குமார் யுவராஜ், மோகன் ஆகியோரிடம் இருந்து சுமார் 1200 மாத்திரைகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி என்று கூறி ஏமாற்றிய மதபோதகர் கைது
May 22, 2024
278
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு குடும்ப பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்ற தம்மை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி என்று கூறி ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகரை போலீசார் கைது செய்தனர்.எஸ்.பி. அலுவலக வரவேற்பறை காவலர், அடையாள அட்டையை கேட்டபோது தர மறுத்து சமாளித்தவரிடம், போலீஸ் நடத்திய விசாரணையில் நீதிபதி என்று பொய் கூறிய அவர், சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மதபோதகர் பாஸ்கர் என்று தெரியவந்தது.
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News