Polimer News
கல்வி வீடியோ

தேர்தலால் அதிக நாட்கள் விடுமுறை..! மாணவர்கள் குஷி

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகிறது.

மக்களவை தேர்தலையொட்டி 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வுகள் தொடங்கின.

இந்த தேர்வுகள் இன்றுடன் முடிவடைவதால், பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது.

தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் முடிந்துவிட்டதால் இந்த ஆண்டு, அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related posts

Polimer News