Polimer News
இந்தியா

மெகபூபா முப்தியின் வாகன அணிவகுப்பில் கல்வீச்சு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெகபூபா முப்தியின் வாகன அணிவகுப்பில், கல்வீச்சு தாக்குதல் நடந்ததால் பரபரப்பு நிலவியது.

ஜம்மு காஷ்மீரின் கிராம் எனும் பகுதியிலுள்ள தர்காவுக்கு சென்ற மெகபூபா, பிஜ்பெகராவில் ஏற்பாடு செய்திருந்த தனது கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது சிலர், அவரது வாகன அணிவகுப்பில் கலந்துகொண்ட ஒரு வாகனத்தின் மீது கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் மெகபூபாவின் பாதுகாப்பு வாகனம் சேதமடைந்து, காரின் கண்ணாடித் துண்டுகள் காருக்குள் விழுந்து கிடந்தன.

இந்த திடீர் அசம்பாவிதத்தையடுத்து, பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து கிளம்பிய மெகபூபா, அதன் பின்னர் தனது கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Related posts

Polimer News