Polimer News
இந்தியா முக்கிய செய்தி

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்க வாய்ப்பு

நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் தொடங்க வாய்ப்புள்ள தென்மேற்கு பருவமழை சராசரி அளவுக்கு பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் , நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவமழை பொழிவு குறித்து ஆய்வு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

1951-ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலாக மாதங்களில், தென்மேற்கு பருவமழையின் சராசரி அளவு 89 சென்டி மீட்டர் என்றும், நடப்பு ஆண்டிலும் இதே அளவிலான மழை பொழிவு இருக்கக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சராசரியை விட கூடுதலாகவோ, அதிக அளவிலோ மழை பெய்ய வாய்ப்பு மிக, மிக குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை நாடு முழுக்க பரவலாக நன்றாக பெய்யும் என்றும் கரீப் பருவ விவசாயத்திற்கு மழை கை கொடுக்கும் என்றும் கூறியுள்ள வானிலை மையம், பருவமழை குறித்து ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் கணிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

Related posts

Polimer News