Polimer News
அரசியல் சென்னை வீடியோ

திட்டமிட்டே விவசாயி சின்னம் தெளிவாக பொறிக்கப்படவில்லை – சீமான்

வாக்குப்பதிவு எந்திரங்களில் தங்கள் கட்சியின் சின்னம் திட்டமிட்டே தெளிவாக பொறிக்கப்படவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தங்கள் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம், வாக்குப்பதிவு எந்திரங்களில் தெளிவற்றதாக பொறிக்கப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றத்தை நாடிய போது, தேர்தல் ஆணையம் அதனை மாற்ற நேரமில்லை என கூறிவிட்டதாகவும், எனவே ஊடகங்கள் மூலம் மக்கள் மன்றத்தை நாடியிருப்பதாகவும் கூறினார்.

தெளிவில்லாமல் சிறியதாக இருப்பது தான் தங்கள் சின்னம் என்றும், வேண்டுமென்று திட்டமிட்டே தங்கள் சின்னம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் சீமான் குற்றம்சாட்டினார்.

தேர்தல் கூட்டங்களுக்கு அனுமதி பெற பல்வேறு அடக்குமுறைகளை தாங்கள் எதிர்கொள்வதாக கூறிய சீமான், தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி என விமர்சித்தார்.

Related posts

Polimer News