​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

ரஜினியின் பேட்ட தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்த சிறிது நேரத்தில் அஜித்தின் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அந்த படத்தின் விநியோக உரிமையை பெற்ற நிறுவனமான...

முதல் நாள் வசூல் தமிழகத்தில் விஸ்வாசம்..! சர்வதேச அளவில் பேட்ட..! 27 ஆண்டு சாதனை தகர்ப்பு

நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் வெளியான நடிகர் அஜீத்குமாரின் விஸ்வாசம் திரைப்படம் முதல் நாள் வசூலில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் ரஜினியின் பேட்ட படம் சாதனை படைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்டயும், அஜீத்குமார்...

பேட்ட, விசுவாசம் திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் என புகார், ஆய்வு செய்ய அதிகாரிகள், வழக்கறிஞர்கள் குழுக்கள்

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விசுவாசம் திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆணையர்கள் கொண்ட குழுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்துள்ளது. சர்க்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய...

பேட்ட திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி

பேட்ட திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார். போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேட்ட திரைப்படம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருப்பதால் தனக்கு மகிழ்ச்சி என்றார். நடிகர் எப்போது தலைவராவார் என்றும், எப்போது கட்சி தொடங்கப்படும் எனவும்...

திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய, அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டம்

திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, வெள்ளிக்கிழமை மாலை அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுக் கூடுகிறது. 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 13 லட்சம் ரூபாய் கட்டணம் பெறப்பட்டுள்ளதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமலை மாலை நடக்கும்...

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம்

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்கள் விநியோகம் நடைபெற்று வருகின்றன. இன்றும் நாளையும் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் காமராஜ் விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கிவைத்தார். ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று,...

ராயப்பேட்டையில் வாஷிங் மெஷன் பழுதுநீக்கும் கடையில் தீ விபத்து

சென்னை ராயப்பேட்டையில் வாஷிங்மெஷின் பழுதுநீக்கும் கடையில் தீப்பற்றியதில், ஏராளமான வாஷிங் மெஷின்கள் தீயில் கருகின. ராயப்பேட்டை - பெருமாள் தெருவில் உள்ள அன்னை வாஷிங்மெஷின் சர்வீஸ் சென்டர், இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடைக்குள் இருந்து புகை வந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர்,...

பழுதான டேங்கர் லாரி மீது கார் மோதி 2 பேர் பரிதாபமாக பலி

இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக காரில் சென்ற குடும்பத்தினர் பழுதாகி நின்ற டேங்கர் லாரி மீது மோதி உயிரிழந்த பரிதாபம் அரங்கேறியிருக்கிறது.  பிரேக் டவுன் ஆகி நின்ற லாரியை அப்புறப்படுத்த முயற்சிக்காத உளுந்தூர்பேட்டை சுங்கவரி வசூல் மையத்தின் அலட்சியத்தால், 2 உயிர்கள்...

தண்டவாளப் புதுப்பிப்புப் பணிகள் தொடக்கம் - அடுத்த 25 நாட்களுக்கு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் : ரயில்வே நிர்வாகம்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தண்டவாள புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுவதால், அவ்வழித்தடத்தில் 25 நாட்களுக்கு ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கேத்தாண்டப்பட்டி முதல் வாணியம்பாடி வரையிலான தண்டவாள புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. மதியம் 12...

ராயப்பேட்டையில் வணிக நிறுவனக் கிடங்கில் திடீர் தீ விபத்து

சென்னை ராயப்பேட்டையில் வணிக நிறுவனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின. ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகம் அருகே பைகிராப்ட்ஸ் சாலையில் கானா பர்னிஷிங் எனப்படும் சோபாக்கள், திரைச்சிலைகள், குஷன் நாற்காலிகள் உள்ளிட்டவற்றை...