​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆவின் பாலில் மோசடி.. மேலாளர் சஸ்பெண்ட்

பால் கொள்முதல் குறித்து போலிக் கணக்கு காட்டி பல கோடி ரூபாயை சுருட்டியதாக வேலூர் ஆவின் நிறுவன பொது மேலாளரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்படும்...

உணவு தீர்ந்துவிட்டதாக கூறிய ஹோட்டல் மேலாளருக்கு அடி

உணவு தீர்ந்துவிட்டது என்று கூறியதற்காக ஹோட்டல் மேலாளரை தாக்கிய இளைஞர்களை, சி.சி.டி.வி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஐய்யனார் கோவில் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற மதுபோதையில் இருந்த 5 இளைஞர்கள் உணவு கேட்டுள்ளனர். அதற்கு...

உலக வங்கி மேலாளர் வீட்டில் கதவை உடைத்துக் கொள்ளை

சென்னை அருகே உத்தண்டியில் உலக வங்கி அலுவலக மேலாளர் வீட்டில் கதவை உடைத்து 20 இலட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள், எண்பதாயிரம் ரூபாய்  பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தண்டியைச் சேர்ந்த சுனில்குமார் சென்னை தரமணியில் உள்ள உலக வங்கி அலுவலகத்தில்...

கடன் கொடுப்பதற்கு படுக்கைக்கு வருமாறு கூறிய வங்கி மேலாளரை சரமாரியாகத் தாக்கிய பெண்

கடன் கொடுப்பதற்கு படுக்கைக்கு வருமாறு கூறிய வங்கி மேலாளரை கர்நாடகத்தில் பெண் சரமாரியாகத் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தாவணகெரேயில் ((Davanagere)) வங்கிக் கடன் கேட்டு அணுகிய பெண்ணிடம் வங்கி மேலாளர் பாலியல் ரீதியாக இணங்க வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் வங்கி மேலாளரை...

ஆப்பிள் போன் நிறுவன பொதுமேலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு பிடியாணை

ஆப்பிள் நிறுவன பொதுமேலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள சக்சஸ் மொபைல்ஸ் என்ற விற்பனை நிலையத்தில் 22 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி ஆப்பிள் ஐ போனை வாங்கியதாகவும், ஆனால் வாங்கிய மறுநாளே...

தாஜ்மகாலை பராமரிக்க ஒரு பொறுப்பதிகாரியை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உலக அதிசயமான தாஜ்மகாலை பராமரிக்க ஒரு பொறுப்பதிகாரியை நியமிக்குமாறு மத்திய அரசையும் உத்தரப்பிரதேச அரசையும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தாஜ்மகால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் உரிய அக்கறை இன்றி செயல்படுவதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தாஜ்மகாலை...

போலி ரசீது கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி - வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவன மேலாளர் கைது

வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி திருப்பூரில் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து விட்டு மோசடி செய்த டூரிஸ்ட் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டு வரும் டூரிஸ்ட் நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர் மோகன். இவர் வெளிநாடு சுற்றுலா செல்ல...

உணவுப் பொருள் விலை அதிகம் எனக் கூறி தாக்கப்பட்ட திரையரங்க மேலாளர்

மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள திரையரங்கில் உணவுப் பொருள் விலை அதிகம் எனக் கூறி மேலாளரை எம்.என்.எஸ். தொண்டர்கள் எனக் கூறி சிலர் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நேற்று மஹாராஷ்டிர நவ நிர்மாண் சேனாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, திரையரங்க மேலாளரை அணுகிய சிலர்,...

கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதைகளின் பாதுகாப்பு குறித்து திருச்சி மண்டல மேலாளர் ஆய்வு

கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதைகளின் பாதுகாப்பு குறித்து திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் ரயில்...

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணம் கிடைக்காத ஆத்திரத்தில் டிவியை அடித்து உடைத்த கொள்ளையர்கள்

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் கொள்ளையடிப்பதற்காக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், நகை, பணம் எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் அங்கிருந்த விலையுயர்ந்த டிவியை அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றுள்ளனர். ஈஞ்சம்பாக்கம் ஜெகஜீவன்ராம் நகர் பகுதியில் வசித்து வரும் பிரபாகரன், தனியார் கார் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து...