​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேனி மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார்

தேனி மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பார்வையிட்டார்.  கஜா புயல் காரணமாக தேனி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரியகுளம் வராகநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 10...

பாலியல் புகார்களை முற்றிலும் மறுக்கிறேன் - பிலிப்கார்ட் முன்னாள் சிஇஓ

பிலிப்கார்ட்டின் தலைமைச் செயலதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய பின்னி பன்சால், தமக்கெதிரான பாலியல்  புகார்களால் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஃபிலிப்கார்ட் நிறுவனத்தைத் தொடங்கிய சச்சின் பன்சால் அந்நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியதும் விலகிய நிலையில், பாலியல் புகார் காரணமாக இணை...

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், 3 சிலைகள் மாயமானது குறித்து ஆலயப் பணியாளர்களிடம் விசாரணை

மயிலாப்பூரில் உள்ள பழமையான கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அங்கிருந்த ராகு, கேது மற்றும் மயில் சிலைகள் சேதமுற்றிருப்பதாகக் கூறி, அவற்றை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள் தரப்பில்...

ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை

ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ் வீடுகளில் நடந்த சோதனையில் 220-க்கும் மேற்பட்ட சிலைகள், கற்தூண்கள், கலைப் பொருட்கள் பறிமுதல்...

பாடகி சின்மயி வைரமுத்து மீது கூறியுள்ள புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் - தமிழிசை

பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது கூறியுள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை...

பேராயர் ஃபிராங்கோ முலக்கல்லிடம் 2-வது நாளாக விசாரணை

கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ முலக்கல்லிடம் கேரள போலீசார் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். பேராயர் ஃபிரான்கோ முல்லக்கல் 2014 முதல் 2016 வரை தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர்...

எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

எம்பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் சென்னையில் தொடங்கப்பட்டது.  97 லட்சம் ரூபாய் செலவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் முதல்மாடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி....

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்திற்கு தடைவிதிக்கக் கோரிய மனு அடுத்தவாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்திற்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு ஆளும்...

காவல்நிலையம் முன்பாக பெண் தீக்குளித்த சம்பவத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணை

சென்னை திருவேற்காடு காவல்நிலையம் முன்பாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. திருவேற்காடு காவல்நிலையத்தின் முன்பாக போலீசார் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி, ரேணுகா என்ற பெண்...

வேளாண் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் விசாரணை 3 மாதத்தில் முடியும் - விசாரணைக் குழு தலைவர்

திருவண்ணாமலை மாவட்டம் வேளாண் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நடத்தப்படும் விசாரணை 3 மாதத்தில் முடிவடையும் என விசாரணைக் குழுவின் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியர்...