​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய விமானப் படையைப் போல் பணியாற்ற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த விமானப் படையினரைப் போல் அரசு ஊழியர்கள் தைரியமாக பணியாற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த அரசு ஊழியர், குடும்பச் சூழ்நிலையைக் காரணம் காட்டி, பணியிட மாற்றத்தை எதிர்த்த வழக்கு, நீதிபதி சுப்பிரமணியம் முன்...

பாகிஸ்தான் எல்லையில் இந்திய போர் விமானங்கள் பயிற்சி,அதிவேகத்தில் பறந்து தயார் நிலையில் இருப்பதை வெளிப்படுத்தின

பாகிஸ்தான் எல்லை நெடுகிலும் இந்திய விமானப்படை சார்பில் தயார்நிலை ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையோரப் பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் அதிவேகத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன.  புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான்...

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவு

விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவடைந்ததையடுத்து அவர் மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஓய்வெடுக்க  மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவ முகாமை தாக்க ஏவுகணையை சுமந்து வந்த பாகிஸ்தான் எப்.16 போர் விமானத்தை விரட்டிச் சென்று...

விமானப்படை தாக்குதல் விவகாரத்தில் நாட்டில் உள்ள 130 கோடி இந்தியர்களே எனது ஆதாரங்கள்: பிரதமர் மோடி

விமானப்படை தாக்குதல் விவகாரத்தில் நாட்டில் உள்ள 130 கோடி இந்தியர்களுமே தனது ஆதாரங்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கத்தின் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரம் கோரி வரும் நிலையில், பிரதமர் இவ்வாறு...

இந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே?

இந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.  கடந்த 26ஆம் தேதி, இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன், அதில் ஒரு விமானமும் சுட்டுவீழ்த்தப்பட்டது. வான்பரப்பில்...

விமானப்படை தாக்குதலுக்குப் பின் தீவிரவாதிகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பேச்சு

இந்தியா நடத்திய வான் தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேசம் காசியாபாத் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதிகள் பதற்ற நிலைக்கு ஆளாகியிருப்பதாக கூறினார். ஜம்முவில் பேருந்து நிலையத்தில் தீவிரவாதிகள் குண்டு  வீசிய சம்பவத்தைக் குறிப்பிட்ட...

இந்திய நாட்டின் நிஜ ஹீரோ அபிநந்தனின் மீசையும் டிரெண்டாகிறது

இந்திய விமானப்படை விங் காமண்டர் அபிநந்தனின் மீசை போல், இளைஞர்கள் பலரும், தங்கள் மீசையையும் வடிவமைத்துக் கொள்வதில், ஆர்வம் காட்டி வருகின்றனர். புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்...

வீரர் அபிநந்தனின் தாயாரும் போர் முனையில் பணியாற்றியவர்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் தாயாரும், போர் முனைகளில் சேவை செய்துள்ளார். அபிநந்தனின் வீரத்திற்கும், விவேகத்திற்கும் அவரது குடும்பமே காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அபிநந்தனின் தந்தை விமானப்படையில் பணிபுரிந்தவர். அவரது தாயார் ஷோபா மருத்துவம் படித்தவர்.ஷோபா, சென்னை மருத்துவக் கல்லூரியில்...

தாயகம் திரும்பிய வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை, பாகிஸ்தானில் நடைபெற்றது குறித்து கேட்டறிய விமானப்படை அதிகாரிகள் முடிவு

விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு டெல்லி விமானப்படை மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெற்றது. அடுத்த கட்டமாக பாகிஸ்தானில் என்ன நடைபெற்றது என்பது குறித்து அவரிடம் விமானப்படை உயரதிகாரிகள் கேட்டறிய உள்ளனர்.  பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்டு 3 நாட்களுக்கு பிறகு அபிநந்தன் இந்தியா திரும்பி உள்ளார்....

24 பாகிஸ்தான் விமானங்களை 8 இந்திய விமானப்படை விமானங்கள் துரத்தியதாக தகவல்

இந்திய எல்லைக்குள் நுழைந்த 24 பாகிஸ்தான் விமானங்களை 8 இந்திய விமானப்படை விமானங்கள் துரத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை அத்துமீறிய பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டியடித்தது. மொத்தம் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 24 விமானங்கள் இந்திய வான் எல்லைப்பகுதிக்கு வந்ததாகவும், அப்போது...