​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடகாவில் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களிடையே மோதல், பிளவைத் தடுக்க இன்று அவசரக் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு

கர்நாடகாவில் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக புகார்...

மிகவும் பழமையான தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து

பிரான்ஸ் நாட்டில் விடுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கியவர்கள் 4வது மாடியில் இருந்து குதித்து தப்பினர். பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள கோர்செவல் என்ற கிராமத்தில் மிகவும் பழமையான தங்கும் விடுதி உள்ளது. 370 ஆண்டுப் பழமையான இந்த விடுதியில் திடீரென தீப்பிடித்தது. இந்த...

சீனாவில் பனிக் கட்டிகளால் உருவான உணவகம்

சீனாவில் பனிக்கட்டிகளால் கட்டப்பட்டுள்ள உணவகம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்நாட்டின் ஹார்பின் நகரில் நடைபெற்று வரும் பனிக்கட்டி திருவிழாவின் ஒரு பகுதியாக பனிக்கட்டிகளால் இந்த உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. மைனஸ் 5 டிகிரியாக உள்ள உணவகத்தின் வெப்பநிலையில் சுடச்சுட உணவை உண்ணுவதே தனி...

ஜப்பானில் ஒரு மீனை 21 கோடி ரூபாய் கொடுத்து ஓட்டல் நிர்வாகம் ஒன்று வாங்கி உள்ளது

ஜப்பானில் ஒரு மீனை 21 கோடி ரூபாய் கொடுத்து ஓட்டல் நிர்வாகம் ஒன்று வாங்கி உள்ளது. புத்தாண்டை ஒட்டி தொடங்கி உள்ள மீன்பிடிக்காலத்தில் மீனவர்கள் பிடித்து வரும் டுனா மீன்களுக்கு ஜப்பானில் பெரும் வரவேற்பு உண்டு. ஜப்பானியர்களின் விருப்ப உணவான டுனா மீன்களை...

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை நட்சத்திர விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை விதித்துள்ளது.  2019 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளும், கேளிக்கை விடுதிகளும் தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல்...

ஜப்பான் நாட்டில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 40 பேர் படுகாயம்

ஜப்பான் நாட்டில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஹொக்காடோ ((Hokkaido)) என்ற தீவுப் பகுதியில் உள்ள உணவு விடுதியில் மர்மப்பொருள் வெடித்துச் சிதறியதில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களும், ஊழியர்களும் படுகாயமடைந்தனர். மர்மப் பொருள் வெடித்ததில் உணவகம் தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. வெடித்த...

நாய் கறியும், நம்ம ஊரு ஓட்டலும்..! அதிர்ச்சியில் சென்னை

நாய் இறைச்சியை ஆட்டிறைச்சி என்று சென்னை ஓட்டல்களுக்கு சப்ளைசெய்யும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னை ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் கிலோ நாய் இறைச்சியின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... சென்னையில் விற்கப்படும் ஆட்டிறைச்சி அனைத்தும்...

கைவிடப்பட்ட கல்குவாரியில் கட்டப்பட்ட நட்சத்திர ஹோட்டல்

சீனாவில் கைவிடப்பட்ட கல்குவாரியில் கட்டப்பட்ட நட்சத்திர ஹோட்டல் திறக்கப்பட்டது. இன்டர் காண்டினன்டல் ஷாங்காய் வொன்டர்லாண்ட் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலின் கட்டுமானப் பணிகள் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்திய மதிப்பில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 17 மாடிகளுடன்,...

தனியார் ஹொட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஹொட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயா பார்க் என்ற தனியார் ஹோட்டலில் 10க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான...

இளம் பெண்களை வைத்து ஆடல், பாடல் நடத்திய தனியார் ஹோட்டலின் மதுபான விடுதிக்கு சீல்

இளம் பெண்களை வைத்து ஆடல், பாடல் நடத்தியது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் தனியார் ஹோட்டலின் மதுபான விடுதிக்கு சீல் வைத்துள்ள போலீசார், 10 பேரை பிடித்துள்ளனர். அரும்பாக்கம் நூறடி சாலையில் இயங்கி வந்த இந்த பாரில்  போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது...