​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலால் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளது - எடியூரப்பா

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை வருகிற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழித்துள்ள நிலையில்,...

கர்நாடகாவில், ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 5 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர்

கர்நாடகாவில், அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 5 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர். கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆளும் கட்சி மீது சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், 4 காங்கிரஸ்...

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏவிடம் எடியூரப்பா பேரம் பேசியது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா பேரம் பேசியது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான நாகன கவுடாவை இழுக்க அவரது மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல்...

குதிரை பேரம் பேசிய ஆடியோ - ஒப்புக் கொண்ட எடியூரப்பா

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற குதிரை பேரம் பேசியது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆடியோவில் இருப்பது தமது குரல் தான் என எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ. நாகனகவுடாவை ((Naganagouda Kandakur)) பாஜகவுக்கு இழுக்க அவரது மகன் சரணகவுடாவிடம் எடியூரப்பா பேரம்...

பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவுக்கு திரும்பி வர அழைப்பு - எடியூரப்பா

கர்நாடகாவில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்தப் போவதில்லை என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும்...

கர்நாடக இடைத்தேர்தல்: அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி உறுதி - எடியூரப்பா

கர்நாடக மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தில் காலியாக இருந்த ஷிமோகா, பெல்லாரி, மற்றும் மாண்டியா மக்களவைத் தொகுதிகளுக்கும் ராமநகரா மற்றும் ஜம்கந்தி ((Jamkhandhi)) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஷிமோகாவில்...

என் மீது நடவடிக்கை எடுத்தால், பிரதமர் மோடி அரசு வேடிக்கை பார்க்காது - குமாரசாமிக்கு எடியூரப்பா எச்சரிக்கை

கர்நாடகத்தில் முதலமைச்சர் குமாரசாமிக்கும் பாஜகவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும் இடையே சொற்போர் வலுத்து வருகிறது. குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா மீது எடியூரப்பா கடுமையான விமர்சனம் செய்திருந்தார். அப்பாவும் மகனும் சேர்ந்து மாநிலத்தையே சூறையாடி விட்டனர் என்று எடியூரப்பா கூறியிருந்தார்....

காங்கிரஸ், ம.ஜ.த கட்சி அதிருப்தியாளர்களை பாஜகவுக்கு அழைத்து வாருங்கள்: எடியூரப்பா

கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் அதிருப்தியுடன் இருப்பவர்களை பாஜகவுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, மக்களின் விருப்பத்திற்கு எதிராக காங்கிரஸ்...

எடியூரப்பா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் : கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார்

முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அவருக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை என்றும், கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில்...

காங்கிரஸ் MLAக்கள் பாஜகவில் சேர ஆர்வம் - எடியூரப்பா

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதாவில் சேர மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில், செய்தியாளர்களிடம்...