​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சட்டவிரோத குடியேற்றம் காரணமாக அமெரிக்க சிறைகளில் 2,400 இந்தியர்கள் இருப்பதாக தகவல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக ஏறத்தாழ 2 ஆயிரத்து 400 இந்தியர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடஅமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் என்ற அமைப்பு தெரிவித்துள்ள புள்ளி விபரங்களின் படி, கலிபோர்னியாவின் அடிலாண்டோ சிறையில் 377 பேரும், இம்பீரியல் பகுதியில் 269...

அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் நாசம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் இருபெரும் காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். ஒரு நகரத்தையும், 7 ஆயிரம் குடியிருப்புகளையும் காட்டுத்தீ எரித்து சாம்பலாக்கியுள்ளது.  கலிஃபோர்னியாவின் வடக்கில் கேம்ப் கிரீக் என்ற இடத்தில் காட்டூத் தீ ஒன்று வியாழக்கிழமை உருவானது....

அமெரிக்கா-மெக்சிக்கோ எல்லையில் சுவர் அமைக்கும் திட்டத்திற்கு டிரம்ப் நிதி ஒதுக்கீடு செய்வதில் பெரும் நெருக்கடி

அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மையை இழந்திருப்பதால், மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு டிரம்ப் நிதி ஒதுக்கீடு செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை எனப்படும் கீழவையில் பெரும்பான்மை பெறவில்லை. செனட்...

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் முட்டாள்தனமாது : ஜேக் மா

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர், உலகிலேயே அதிக முட்டாள்தனமானது என்று பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபாவின் இணை நிறுவனர் ஜேக்மா தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு வரியை உயர்த்தி வரும் நிலையில், மேலும் 50 ஆயிரம் கோடி...

டெக்சாஸ் மாகாணத்தில், மழை வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட பள்ளிப் பேருந்து

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், மழை வெள்ளம் ஏற்பட்டபோது அதில், சிக்கிய பள்ளி பேருந்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 15ஆம் தேதி பெய்த கடுமையான மழையால், அதற்கு...

அமெரிக்காவில் தபால் வெடிகுண்டு பார்சல்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் எம்பி உள்ளிட்ட மேலும் 2 பேருக்கு வெடிகுண்டு பார்சல்கள் அனுப்பப் பட்டுள்ளன. முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்கள் என 10 பேருக்கு தபால் மூலம் வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது....

சவுதி அரேபிய செய்தியாளர் கசோக்கி கொலையில் தொடர்புடைய அதிகாரிகள் அடையாளம் தெரிந்ததாக அமெரிக்கா தகவல்

சவுதி அரேபிய செய்தியாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி நாட்டில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டதை, சவுதி அரேபிய அரசு  ஒப்புக் கொண்டுள்ள நிலையில்,...

அமெரிக்கா முன்னாள் அதிபர்கள் வீடுகளில் வெடிகுண்டு பார்சல்கள்

அமெரிக்க முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், ஒபாமா ஆகியோரின் வீடுகளில் இருந்து வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. வாஷிங்டன் நகரில் உள்ள ஒபாமாவின் வீட்டிலும், நியூயார்க் நகரில் உள்ள கிளிண்டனின் வீட்டிலும் இருந்து வெடிகுண்டு அடங்கிய பார்சல்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. அந்த பார்சல்களை அனுப்பியவர்கள்...

ரூ 7,117,37,50,000 கோடி முதல் பரிசு தரும் அமெரிக்கா லாட்டரி வாங்க மக்கள் போட்டி

அமெரிக்காவில் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்நாட்டில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள அந்த லாட்டரியில் முதல் பரிசு பெறுவோருக்கு இந்திய மதிப்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதே இதற்கு காரணமாகும். முதல் பரிசை...

பணக் கண்காணிப்பு பட்டியலில் இருந்து ரூபாயை நீக்க முடிவு

பணக் கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாயை நீக்க உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு கருவூலத்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, சுவிட்சர்லாந்து நாட்டு பணத்துடன் சேர்ந்து இந்திய ரூபாயை கண்காணிப்பு...