​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எண்ணூர் சதுப்புநிலத்தில் நிலக்கரி சாம்பல் கொட்டுவதற்கு வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக, சென்னை எண்ணூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்....

உடன்குடி அனல்மின்நிலையத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைகிளை தள்ளுபடி செய்தது. உடன்குடியில் மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கடந்த 2015ல் அனல்மின் நிலையம் அமைக்க அனுமதி...

மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

நிலக்கரி பற்றாக்குறை, கொதிகலன் பாதிப்பு ஆகிய காரணங்களால் மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இதில்...

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்ததில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் கன்வெயர் பெல்ட் அறுந்து விழுந்ததன் காரணமாக 420 மெகாவாட்  மின்  உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் ஆயிரத்து 50 மெகாவாட்...

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலனில் கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மறு டெண்டர் விட நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மறு டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரிவாக்கப் பணிகள் தாமதமாகி வருவது குறித்த கேள்விக்கு ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்தவர்...

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் காற்றாலையில் இருந்த அதிகளவில் மின்சாரம் கிடைப்பதால் 2 யூனிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இந்த யூனிட்டின் மூலம் தினமும் ஆயிரத்து...

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக 4-வது யூனிட் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையதில் பராமரிப்பு பணிகளுக்காக 4-வது யூனிட் நிறுத்தப்பட்டுள்ளதால் 250 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 5 யூனிட்டுகள் தினமும் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று முதல் 15 நாட்களுக்கு 4-வது யூனிட்...

உத்தரப்பிரதேசத்தில் அனல்மின் நிலையத்தில் தீ விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் அன்பரா அனல் மின் நிலையத்தில், நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னரும் தீ கட்டுக்குள்...

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட்டில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகள்  மூலம் தினமும் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 19ம்தேதி...