​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சயன், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மனுத் தாக்கல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உதகையில் உள்ள மாவட்ட  நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொள்ளை முயற்சியின் போது காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்....

ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்க வேண்டும் , தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் அறிவுறுத்தல்

சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதிக்கும்படி உத்தரவை மாற்றக் கோரும் அரசின் முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இந்த...

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10சதவீத ஒதுக்கீடு, தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் - ஸ்டாலின்

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்புகளில் 10விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

ஜனவரி 8, 9 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

ஜனவரி 8, 9 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில், ஜனவரி 8,...

ஜன.31க்குள் வேட்டி-சேலைகள் வழங்கப்பட வேண்டும் - தமிழக அரசு

தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் விலையில்லா வேட்டி - சேலை கிடைப்பதை உறுதி செய்யுமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விலையில்லா வேட்டி சேலையை வழங்கும் போது நியாய விலைக்கடைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில்லாமல் காவல்துறையினர் கண்காணிப்பு...

இணையம் வழியாக பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை, பதிவு செய்த நாளிலேயே ஆவணங்களை திரும்பப் பெறும் நடைமுறை

பத்திரப்பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கக்கூடிய ஆவணங்களை உரிய நபரிடம் பதிவு செய்யப்பட்ட அன்றே வழங்கும் புதிய வசதியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஸ்டார் 2 பாய்ண்ட் ஜீரோ திட்டத்தின் மூலம் கடந்த 27ஆம் தேதி வரை 22 லட்சத்துக்கும்...

தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் ? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் வசிப்பவர்கள்  எத்தனை பேர் என அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் - ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவால் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவதாகவும் அவர்களுக்கு...

ரவிச்சந்திரன் முறையான காரணங்களுடன் விண்ணப்பித்தால் 10 நாள் பரோல் வழங்க தயார் : தமிழக அரசு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் முறையான காரணங்களுடன் முறைப்படி விண்ணப்பித்தால், 10 நாள் பரோல் வழங்க தயார் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரியில் மனுவில் தனக்கு 62 வயதாகிவிட்டதால் அடிக்கடி நோய்வாய்ப்படுவதாகவும்,...

மும்கொம்பில் புதிய அணை கட்ட ரூ 387. 60 கோடி ஒதுக்கீடு

திருச்சியை அடுத்த முக்கொம்பில் புதிய தடுப்பணை கட்ட 387 கோடியே 60 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம் காவேரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் மேட்டூர் அணை நிரம்பியது. இதிலிருந்து...

தமிழக அரசு 2019-20 கல்வியாண்டில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் சேர்க்க உள்ளதாக தகவல்

தமிழக அரசு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்புக்கு 350 இடங்களைக் கூடுதலாக சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள 22 மருத்துவக் கல்லூரிகளுடன் மேலும் இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகள் இணைக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 900...