​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வைகோ வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெற்களஞ்சியமாக, நாட்டுக்கே உணவளித்து வரும் காவிரி டெல்டா, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களால்...

மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிர இயக்கமாக்க வேண்டும்

நிலத்தடி நீர்வளம் பெருக்க மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிர இயக்கமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இயற்கை கொடையாக கொடுத்த தண்ணீர் வளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது நமது தவறுதான் என்று...

நீட் தேர்வை தவிர்க்க கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

நீட் தேர்வை தவிர்க்க வேண்டுமென்றால், கல்வியை மத்திய அரசு பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து...

MP, MLA-க்கள் மீதான வழக்குகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்த விபரங்களை அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில், பெட்ரோல்-டீசல் மீதான விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்து இருப்பதோடு, விலையேற்றத்தையும்...

மாநில உரிமைகளுக்கு குரல்கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடி போன்று நடந்து கொள்கிறது தமிழக அரசு - கமல்ஹாசன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் போலியான உண்ணாவிரதம் இருந்தும், அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும் இயலாமையை வெளிக்காட்டியதோடு, மாநில உரிமைகளுக்கு குரல்கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடி போன்று நடந்து கொள்வதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். ...