​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தலைக்கவசம் அணியாமல் வந்த வழக்கறிஞருக்கு அபராதம்

சென்னை சைதாப்பேட்டையில் தலைக்கவசம் அணியாமல் வந்ததுடன், போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தாடண்டர் நகர் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை அன்று போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த...

மழைநீர் சேகரிப்பு திட்டம்..! களத்தில் இறங்கிய MLA

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் தொகுதி முழுவதும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க அரசு அதிகாரிகளை எதிர்பார்க்காமல், எம்எல்ஏ ஒருவர் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்... நகரங்களில் பெய்கின்ற குறைந்த மழை நீரும் நிலத்திற்குள் செல்லாததற்கான காரணம் குறித்து இப்படி விவரிக்கிறார்...

பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரிடம் 40 லட்சம் ரூபாய் கடன்வாங்கி திருப்பித் தரவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே...

மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் குடும்பத்தகராறில், மனைவியைக் கொன்றுவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குன்றத்தூரை சேர்ந்த கார்த்திக்-சௌமியா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீபகாலமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், கோபத்தில் சௌமியா சைதாப்பேட்டையில்...

லதா ரஜினிகாந்த் பள்ளியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளியில் தோட்டத் தொழிலாளி மரத்திலிருந்து விழுந்து பலியானார். சென்னை சைதாப்பேட்டையில் ஆஷ்ரம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தோட்டப் பராமரிப்பாளராக உள்ள ஆறுமுகம், கடந்த சனிக்கிழமை, வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி...

ஜுஸில் ஐஸ் குறைவாக இருந்ததாகக் கூறி கடை ஊழியர்கள் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல்

சென்னை நந்தனத்தில் ஜூஸில் ஐஸ் குறைவாக இருந்ததால் ஆத்திரமடைந்து கல்லுரி மாணவர்கள் கடை ஊழியர்களைத் தாக்கினர். நேற்றிரவு 12 மணியளவில் நந்தனத்திலுள்ள லஸ்ஸி ஷாப் என்ற ஜூஸ் கடையில், கல்லூரி மாணவர்களான ஜெகதீஷ் மற்றும் தனுஷ் ஆகியோர் ஜூஸ் குடித்துள்ளனர். ஜெகதீஷ் ஜூஸில்...

முகவரி கேட்பது போல் நடித்து வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதுடன் உரிமையாளரிடம் நன்றி சொன்ன கொள்ளையன்

சென்னையில், முகவரி கேட்பது போல் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த உரிமையாளரிடமே கொள்ளையன் நன்றி தெரிவித்து சென்ற நூதன சம்பவம் நடந்தேறியுள்ளது.  சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் கீழ்தளத்திலும், முதல் தளத்திலும் முகமது ஆசன் என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். செவ்வாய்க்கிழமை...

முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வீட்டிலிருந்து ராட்சத கருப்பு பலூன்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வீட்டிலிருந்து ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. அதில் பிரதமர் மோடியை திரும்பச் செல்ல வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தனர். இதனிடையே, மா.சுப்பிரமணியன் வீட்டில் இருந்து பறக்க விடப்பட்ட ராட்சத பலூனை போலீசார் இறக்கினர். ...

பனகல் மாளிகை முன்பு பாரதிய மீனவர் சங்கத்தினர் திடீர் தர்ணா போராட்டம்

சென்னை பனகல் மாளிகை முன்பாக பாரதிய மீனவர் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்டத்தின் கீழ், வெளியிட்டுள்ள புதிய வரைபடம் குறித்த குறைகளை தெரிவிப்பதற்காக சுற்றுச்சூழல் துறை இயக்குநரை சந்திக்க இச்சங்கத்தினர் சென்றனர்....

புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து தகராறு செய்த 4 பேர் கைது

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே புதுச்சேரி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்து தகராறு செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஞாயிற்றுக் கிழமை இரவு 12.40 மணி அளவில், புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை ஜோசப், அருணாசலம், முகமது...