​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காங். தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலக வேண்டும் - விஜய் ரூபானி

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், நாட்டை தவறாக வழிநடத்தும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரஃபேல் போர் விமானங்களை தலா 526 கோடி...

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை மோடியை தூங்கவிடமாட்டோம் - ராகுல் காந்தி

மத்திய அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிடப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்....

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த எதிர்ப்பு

மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு தான் பிரதமரை முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராகுல் பிரதமர் வேட்பாளராக தாம் முன்மொழிவதாகவும், அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல், காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர்

ரஃபேல் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் பொய் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். பாலாஜி திரையரங்கில் இருந்து பா.ஜ.க மாநிலத் தலைவர் தலைமையில் பேரணியாக புறப்பட்ட...

"ராகுல் காந்தி 'பப்பு' அல்ல; தேர்ந்த தலைவராக திகழ்கிறார்" - ராம்தாஸ் அத்வாலே

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்ந்த அரசியல்வாதியாக திகழ்வதாக, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புகழாரம் சூட்டியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் இந்திய குடியரசு கட்சியின் தலைவரான ராம்தாஸ் அத்வாலே, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்,...

டெல்லியில் மத்திய அமைச்சர் தலைமையில் பா.ஜ.கவினர் ஆர்பாட்டம்

ரஃபேல் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் பொய் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் விஜய் கோயல் தலைமையில் டெல்லியில் பா.ஜ.கவினர் ஆர்பாட்டம் நடத்தினர். ரஃபேல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதால் விசாரணை தேவையற்றது என்று...

சத்தீஷ்கர் மாநில முதலமைச்சரை தேர்வு செய்வதில் நீடிக்கும் இழுபறி

சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் யார் என்பதை, இன்று மாலை 4 மணிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன்...

மூன்று மாநிலங்களில் விரைவில் விவசாயக் கடன்கள் ரத்து - ராகுல்காந்தி

பதவியேற்ற பத்து நாட்களுக்குள் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் ஆட்சி...

இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் முதலமைச்சர் பதவிக்கு போட்டி, ராகுல்காந்தியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம்

இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் முதலமைச்சர் யார் எனத் தீர்மானிப்பதற்காகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இராஜஸ்தானில் மாநிலக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்...

டெல்லியில் ராகுல் காந்தியுடன் - சோனியா காந்தி சந்திப்பு

டெல்லியில் ராகுல் காந்தியை மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் போட்டியில் உள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா சந்தித்து பேசினார். இந்த நிலையில் ராகுல் காந்தி வீட்டுக்கு அவரது தாயாரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி வருகை தந்தார். இருவரும் ராஜஸ்தான், மத்திய...