​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், சில்வர்ஓக் உள்ளிட்ட மரங்களை அகற்ற ஆய்வுக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழக வனங்களில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், சில்வர்ஓக் உள்ளிட்ட வெளிநாட்டு மரங்களை அகற்ற ஆய்வுக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்த வகை மரங்கள்...

தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் ? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் வசிப்பவர்கள்  எத்தனை பேர் என அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் - ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவால் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவதாகவும் அவர்களுக்கு...

ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை அளிக்க தீபா, தீபக் ஆகியோருக்கு ஆணை

ஜெயலலிதாவின் சொத்துக்களை பராமரிக்கக் கோரிய வழக்கில், அவரது சொத்து விவரங்களை அறிக்கையாக அளிக்க தீபா, தீபக் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க உயர்நீதிமன்றம் ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டுமென கோரியிருந்தார். இதை...

தஞ்சையில் இளம்பெண் பாலியல் வன்முறைக்குள்ளான வழக்கு, வழக்கின் தற்போதைய நிலையை தாக்கல் செய்ய தஞ்சை எஸ்.பி.க்கு ஆணை

தஞ்சையில் இளம்பெண் பாலியல் வன்முறைக்குள்ளானது குறித்த வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்.பி.க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ஜவுளிக்கடையில்...

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் ? சென்னை உயர் நீதிமன்றம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடலூர், அரியலூர் மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க...

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநில தேர்தல் ஆணையர், ஆணைய செயலாளர் ஆஜராக உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர், ஆணைய செயலாளர் ஆகியோரை வரும் 18 ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும்...

வண்டல் மண் எடுப்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க நேரிடும்

நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பது குறித்து தமிழக அரசு ஜனவரி 7 ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க நேரிடும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு...

குண்டர் சட்டங்களின் கீழ் சிறைகளில் அடைக்கப்படும் வழக்குகளில் ஆஜராக, சிறப்பு வழக்கறிஞர்களை அரசு நியமிக்கலாமே : சென்னை உயர்நீதிமன்றம்

குண்டர் சட்டங்களின்கீழ் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்த வழக்குகளில் ஆஜராக, சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. வேலூரைச் சேர்ந்த அமர்நாத் என்பவரை, ரேஷன் அரிசி கடத்தியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி...

தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்களிக்க மறுத்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை

தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரியிலிருந்து விலக்களிக்க மறுத்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்தத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரியில் இருந்து  விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விலக்கை...

தமிழக அரசின் இலவச சைக்கிள்களில் கர்நாடக அரசின் லோகோ எப்படி வந்தது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் திட்டத்தில் வழங்கப்படுகிற சைக்கிள்களில் எப்படி கர்நாடக அரசின் லோகோ வந்தது என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல மனுவில், விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு அரசின் திட்டத்தின் கீழ்...