​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

GK வாசன் தாயாரின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி

சென்னையில், உடல்நலக் குறைவால் காலமான, தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள், 87வது வயதில் உடல் நலக்குறைவால்  காலமானார். ...

பதவி ஏற்பதற்கு முன்பே திமுக எம்.பி.க்கள் வெற்றி கண்டவர்கள் ,மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தெற்கு ரயில்வேயில் தமிழ் பேச கூடாது என வந்த அறிவிப்பை திரும்ப பெற செய்து, பதவி ஏற்பதற்கு முன்பே திமுக எம்.பி.க்கள் வெற்றி கண்டவர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க .வின்...

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்பாட்டம்...

தண்ணீர் எங்கே, தண்ணீர் எங்கே என்ற தமிழகத்தின் குரல் ஆட்சியாளர்களுக்கு கேட்காததால்தான் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பதவியைக் காப்பாற்றவே ஆட்சியாளர்கள் யாகம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, திமுக தலைவர்...

"புதிய மொந்தையில் பழைய கள்” - முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் சந்திப்பு குறித்து ஸ்டாலின் விமர்சனம்

தலைநகர் டெல்லிக்குச் சென்று, பிரதமர் நரேந்திர மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்திருக்கும் கோரிக்கை மனு, "புதிய மொந்தையில் பழைய கள்" என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில்,...

சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடி நடவடிக்கை வேண்டும் - மு.க.ஸ்டாலின்

சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழக முதலமைச்சர் ஈடுபட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாள்தோறும் குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத் திண்டாடும் மக்கள் பற்றித் துளியும் கவலைப்படா ஆட்சியாளர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்...

அன்பில் தர்மலிங்கத்தின் வெண்கலச் சிலையை திறந்துவைத்த மு.க. ஸ்டாலின்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். அன்பில் தர்மலிங்கத்தின் ஏழரை அடி உயரமுள்ள வெண்கலச் சிலை திறப்பு விழாவில், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி,...

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது - சத்தியராஜ்

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது உறுதியாகிவிட்டதாக நடிகர் சத்தியராஜ் கூறியுள்ளார். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தி.மு.க. ஆலமரமாக விழுதுவிட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் விக்னேஸ்வரன், மலேசிய எம்.பி. சரவணன், இலங்கை...

முக்கியப் பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்

தமிழகத்தில் நிலவி வரும் முக்கியப் பிரச்சனைகளை பற்றி விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் பஞ்சம், குறுவை சாகுபடிக்கு நீர்திறக்கப்படாதது, கர்நாடக அரசு தண்ணீர் திறக்காதது, “நீட்”...

கொளத்தூர் தொகுதியில் இலவச குடிநீர் வழங்கிய மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின் இலவச குடிநீர் வழங்கினார். சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் கொளத்தூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தண்ணீர் லாரி மூலம் இலவச குடிநீரை, திமுக தலைவரும் கொளத்தூர்...

அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிட மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுஉலை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை...