​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதால் தேமுதிகவுக்கு பாதிப்பு இல்லை - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதால் தேமுதிகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த கரசங்காலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். ...

திருச்சியில் கமலுக்கு உற்சாக வரவேற்பு

மக்கள் நீதி மய்யத்தின் மாநாட்டிற்காக ரயில் மூலம் திருச்சி சென்றடைந்த நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் வைகை விரைவு ரயிலில் புறப்பட்ட கமல்ஹாசன், வழியில் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் ஆகிய இடங்களில் கூடியிருந்த பொதுமக்களைப்...

வாட்டாள் விளையாடுவது போல் நான் விளையாட விரும்பவில்லை: கமல்

ரஜினி , கமல் படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்ற வாட்டாள் நாகராஜ் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல், அவர் விளையாடுவது போன்று தாம் விளையாட விரும்பவில்லை என்றார்....

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது என்றும், அரசியல் நோக்கத்துடன் ...

தமிழ்நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என அமைச்சர் வேலுமணி பேட்டி

தமிழ்நாட்டின் உண்மையான சூப்பர் ஸ்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.  சென்னை கோடம்பாக்கத்தில், ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வேலுமணி இவ்வாறு கூறினார்.   நடிகர் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,...

கயவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கண்டிப்பாக சத்தியம் செய்கிறேன்- கமல்ஹாசன்

அரசியலில் தான் விலை போகமாட்டேன் என்றும், கயவர்களுடன் கூட்டணி இல்லை என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். திருச்சி சம்பவத்தில் உயிரிழந்த கர்ப்பணி பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். மக்கள்...

ம.நீ.ம தலைமை அலுவலகமாக மாறுகிறது கமல்வீடு

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டை, மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகமாக, நடிகர் கமல்ஹாசன் நாளை முறைப்படி அறிவிக்கவிருக்கிறார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், எல்டாம்ஸ் சாலையில் நடிகர் கமல்ஹாசனின் வீடு அமைந்திருக்கிறது. அரசியலில் களம் கண்ட பின்னர், கட்சி நிர்வாகிகள், பொதுவாழ்வில் இருப்பவர்கள்,...

நேர்மைதான் தொண்டர்களின் அடையாளமாக இருக்க வேண்டும் ; கமல்

தொண்டர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் அவரது...

அரசியலில் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலைதான் கமலுக்கும் ஏற்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட நிலைதான், புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் கமலஹாசனுக்கும் ஏற்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எந்த...

கமல் இல்லத்தில் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. மதுரையில் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை அறிமுகம் செய்த நடிகர் கமல்ஹாசன், ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். ...