​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது தொடர்பாக எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்?

இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அரசு எந்திரம் துணைபோயுள்ளதாகக் கூறியுள்ள உயர்நீதிமன்றம், சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது தொடர்பாக எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்? என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி...

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட விருதுநகர் பெண் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வருகிற திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நீதிபதிகள் அறையில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. மதுரையை சேர்ந்த அப்பாசாமி, முத்துக்குமார் ஆகியோர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தமிழ்நாடு...

2012ல் அதிமுக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கு, 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை

சிவகங்கையில் அதிமுக நிர்வாகி உட்பட மூவர் கொலை வழக்கில் 11 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை வழங்கிய கீழமை நீதிமன்ற உத்தரவை, உயர்நீதிமன்ற கிளை உறுதி செய்து உத்தரவிட்டிருக்கிறது. சிவகங்கை அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்த கதிரேசன் என்பவர், இளையான்குடி...

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்த தயார் - உயர்நீதிமன்றத்தில் பதில்

போலியோ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் போல் நோய் பாதிப்பு இல்லாத நாடாக இந்தியா உருவாக தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும்...

பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

கொடைக்கானலில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கொடைக்கானலைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ஜெயசீலன் என்பவன் 8 பேருககு தாயான தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுபற்றி கொடைக்கானல் போலீசாரிடம்...

தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு கலைஞரின் அடுத்த வாரிசு யார் என்று கருத்து கணிப்பு வெளியிட்ட தினகரன்...

அரசு மருத்துவமனைகளில் தானமாக பெறப்படும் உடலுறுப்புகள், தனியார் மருத்துவனைகளுக்கு வழங்கப்படுவது எப்படி?: நீதிபதிகள்

அரசு மருத்துவமனைகளில் தானமாகப் பெறப்படும் உடலுறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கு எவ்வாறு? எப்படி? வழங்கப்படுகின்றன என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.  மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில், சென்னை, மதுரை,...

ரசாயான தொழிற்சாலை தாமிரபரணியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கிறதா?- ஆய்வு செய்ய உத்தரவு

தூத்துக்குடி தா.ரங்கதாரா ரசாயான தொழிற்சாலை தாமிரபரணியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கிறதா? என ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அனுமதியின்றி ராட்சத மோட்டார் நீரேற்று நிலையம் மூலம் பல ஆண்டுகளாக தண்ணீர் எடுப்பதால் அரசுக்கு...

பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை

பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கலின்...

பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறார்கள், பெண்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது

பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறார்கள், பெண்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். டிஜிபி அலுவலகத்தில் இருந்து, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ்...