​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவு

  இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குலு மாவட்டம் சோலங் என்ற இடத்தில் பனிபொழிவால் ஏற்பட்ட சாலைத் தடைளை அடுத்து அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை விட்டு நிறுத்திவிட்டு இறங்கிய சுற்றுலா...

காஷ்மீர் பள்ளத் தாக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு

காஷ்மீர் பள்ளத் தாக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. காஷ்மீரின் பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் தொடர் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கட்டிடங்கள், சாலைகள் வாகனங்கள் மீது பனிப்போர்வை போத்தியது...

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லிக்கு வரும் ரயில்கள் தாமதம்

மழை, பனிமூட்டம் காரணமாக, வட மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் ரயில்கள் தாமதமாக வந்தடைகின்றன. அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதுதவிர புதுடெல்லியில் இரு தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது. எனவே, வட மாநிலங்களில் இருந்து...

ஹிமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு - 5 மாவட்ட மக்களுக்கு பனிச்சரிவு அபாய எச்சரிக்கை

ஹிமாச்சல் பிரதேசத்தில், கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது.  இதனைத் தொடர்ந்து, 5 மாவட்டங்களுக்கு, பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஹிமாச்சல் பிரதேச தலைநகர் சிம்லா, குஃப்ரீ உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதேபோன்று, சாம்பா, லாஹால்-ஸ்பிட்டி, கின்னவூர், குலு ( Chamba, Lahaul-Spiti, Kinnaur...

டெல்லியில் அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில அடி தூரத்தில் உள்ள பொருட்களைக் கூட காண முடியாத அளவுக்கு டெல்லியில் பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளாக்கினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி...

மான்செஸ்டர் உள்ளிட்ட நகரங்களில் கடும் பனிப்பொழிவு

இங்கிலாந்தின் மான்செஸ்டர் உள்ளிட்ட நகரங்களில் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. டிரபோர்ட், சால்போர்டு, ஆல்தம், மான்செஸ்டர், ஸ்டாக்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் பனி பொழிந்து வருகிறது. சாலைப் போக்குவரத்தில் விபத்துக்கள் ஏற்படுவதை அடுத்து, பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. டிராம்,...

இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இமாச்சல பிரதேசத்தின் உதய்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள் மீது பனி படர்ந்து காணப்படுகிறது.பனிப்பொழிவால்...

ஜம்மு-காஷ்மீரில் சாலைகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணி தீவிரம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், சாலைகளை ஆக்கிரமித்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குளிர்காலம் தொடங்கியதில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. ரஜோரி பகுதியில் மலைகள், சாலைகள், வீடுகளின் கூரைகள் அனைத்தையும் பனி...

டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

டெல்லியில் காலையில் நிலவிய கடும் பனிப்பொழிவால், பொதுமக்களும், நடைபயிற்சி செய்தவர்களும் கடும் அவதி அடைந்தனர். பனிக்காலம் தொடங்கியதில் இருந்து, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இந்நிலையில், இன்று காலை டெல்லி ராஜ்பாத் மற்றும் ரயில் நிலையப் பகுதிகளில் கடும்...

உத்தரக்கண்ட், இமாச்சல் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு, சாலைப்போக்குவரத்து பாதிப்பு

உத்தரக்கண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவால் மலைப்பகுதிகள் வெள்ளித்தகட்டால் மூடியது போல் காட்சியளிக்கின்றன. நாட்டின் வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் உத்தரக்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. இதனால் மரங்கள் மீதும், வீடுகள், கட்டடங்களின் கூரைகளின்...