​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

குட்கா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளான மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், குட்கா ஆலை...

உணவுப் பாதுகாப்புத்துறை சோதனையில் 2 டன்னுக்கு மேல் குட்கா பொருட்கள் சிக்கின

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் 2 டன்னுக்கு மேல் குட்கா பொருட்கள் சிக்கியுள்ளன. தாடிக்கொம்பை அடுத்த கிரியம்பட்டி கிராமத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட உணவுப்...

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவுடன் தொடர்புடைய 6 பேரிடம் விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் மேலாளர்கள், நிர்வாகிகள் என 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ சோதனையை தொடர்ந்து அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத குட்கா ஆலை அதிபர் மாதவராவ்,...

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி CBI மனுத்தாக்கல்

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, சட்டவிரோத குட்கா ஆலை...

குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை? - மு.க.ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர்  விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி ராஜேந்திரனையும் கைது செய்ய சிபிஐ தயங்குவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பி.க்கும் லஞ்சம் கொடுத்த மாதவராவ் கைது செய்யப்பட்டு...

குட்கா முறைகேடு புகார் தொடர்பாக தமிழக DGP டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் CBI அதிகாரிகள் அதிரடி சோதனை

குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பான் மசாலா, குட்கா ஆகியவற்றை உற்பத்தி செய்யவும்,...

குட்கா நிறுவன உரிமையாளரிடம் CBI அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை

குட்கா ஊழல் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சி.பி.ஐ அலுவலகத்தில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் சி.பி.ஐ தரப்பு 12 மணி நேரம் விசாரணை நடத்தியது.  சென்னையில் விசாரணைக்கு ஆஜரான குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவிடம், தமிழகத்தில்  யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது...

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சென்னை கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்துள்ளனர். கோயம்பேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற கண்டெய்னர் லாரியை சோதனை செய்த போலீசார், அதில் இருந்த...

பெங்களூரில் இருந்து வந்த லாரிகளில் ஒரு கோடி ரூபாய்க்கு குட்கா பறிமுதல்

பெங்களூரில் இருந்து 2லாரிகளில் கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வாகனச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடி அருகே நேற்றிரவு காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த இரண்டு...

சட்டப்பேரவைக்குள் போதை வஸ்துக்களுடன் வந்த அ.தி.மு.க. MLA-க்கள்

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான கஞ்சா, குட்கா, பான்பராக் உள்ளிட்டவற்றை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்தனர். போதைப் வஸ்துக்களை அவரகள் சபாநாயகர் முன் எடுத்துக் காட்டினர். அப்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்றத் தலைவர், அன்பழகன் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட கஞ்சா,...