​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசு பள்ளியில் தகரக்கொட்டகையில் மண் தரையில் அமர்ந்து படிக்கும் பள்ளி மாணவர்களின் அவலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தகரக் கொட்டகையில், மண் தரையில் அமர்ந்து படிக்கும் அவலத்தை உடனடியாக போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியமங்கலம் அடுத்த குஜ்ஜம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் குஜ்ஜம்பாளையம், பண்ணையத்தூர்,...

தமிழக அரசு 2019-20 கல்வியாண்டில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் சேர்க்க உள்ளதாக தகவல்

தமிழக அரசு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்புக்கு 350 இடங்களைக் கூடுதலாக சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள 22 மருத்துவக் கல்லூரிகளுடன் மேலும் இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகள் இணைக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 900...

தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு மாநிலத்திற்கு சாதகமாக செயல்படக்கூடாது, மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு மாநிலத்திற்கு சாதகமாக செயல்படும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவிற்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் ஒரு சார்பாக மத்திய அரசு...

வாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஏற்பாடு

வாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் அவர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுமென கூறப்பட்டுள்ளது. அந்த...

மேகதாது அணை விவகாரம் தமிழக அரசின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணை

மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க உள்ளது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை...

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் ? சென்னை உயர் நீதிமன்றம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடலூர், அரியலூர் மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க...

124 நகராட்சிகளின் வார்டு மறுவரையறை அரசிதழில் வெளியிடப்படும் - தமிழக அரசு

தமிழகத்தில் 124 நகராட்சிகளின் வார்டு மறுவரையறை, வார்டு எல்லை குறித்த விவரங்களின் அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் நிறைவடைந்ததையடுத்து, அந்த ஆண்டில் செப்டம்பரில் உள்ளாட்சித் தேர்தல்...

வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஒத்திவைப்பதாக, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு

நீதிமன்ற அறிவுரைகளை ஏற்றும், அதன் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாலும் ஜனவரி 7ம் தேதி வரை தங்களது போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஜாக்டோஜியோ உயர் மட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், ஊதிய முரண்பாட்டை களைதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான...

அரசு பள்ளிகளில் பயின்ற 7 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக தகவல்

நடப்பு ஆண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 7 பேருக்கு தான் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், இடம் கிடைத்துள்ளது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனியார் பள்ளிகளில் பயின்ற 20 மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்கள்...

அல்வா தர முயற்சிக்க வேண்டாம்... சிவக்குமாருக்கு ஜெயக்குமார் பதிலடி

மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர், தமிழகத்திற்கு அல்வா தர முயற்சிக்க வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மூதறிஞர் ராஜாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன்,...