​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரதமர் மோடி தியானம் செய்த குகையில் சிசிடிவி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள்..!

கேதார்நாத்தில் மோடி தியானம் செய்த குகை, மின்சாரம், தொலைபேசி, கழிவறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது என்பதோடு, சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு குழுவினரும் வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர்.  பிரதமர் மோடி நேற்று தியானம் செய்த குகை கேதார்நாத் கோவிலின் கண்கவர்...

சீனாவில் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் பனிக் குகைகள்

சீனாவின் வடக்குப்பகுதியில் காணப்படும் பனிக்குகைகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்கின்றன. ஷான்க்சி மாகாணத்தில் மலைப்பகுதியில் 35 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் இயற்கையாக அமைந்துள்ள 14 பனிக்குகைகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கின்றன. ஒழுகிய நீர் உறைந்து கூர்மையாக தொங்கும் பனிக்கட்டிகள் வியப்பை...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கேவியட் மனு தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை தருண் அகர்வாலா குழுவினர் அளித்த பரிந்துரையின் பேரில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. மேலும்,...

காவிரி கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

காவிரி கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடக் கோரி காவிரி மேலாண்மை ஆணைய தமிழக உறுப்பினரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு 58 நாட்கள் ஆகியும் புள்ளம்பாடி, அய்யன், பெருவளை உள்ளிட்ட கிளை வாய்க்கால்களில் போதிய...

ஆக்ரா-லக்னோ அதிவிரைவுச் சாலையில் கூகுள் மேப்-ஐ பின்தொடர்ந்து சென்றவர்கள் 65 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்து

ஆக்ரா-லக்னோ அதிவிரைவுச் சாலையில் கூகுள் மேப்-ஐ பின்தொடர்ந்து சென்றவர்கள் 65 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கினர். கன்னாஜ் (Kannauj) பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது நவுசாத், தமது மனைவிக்கு பரிசளிப்பதற்காக சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன்...

தாய்லாந்தில் குகையில் சிக்கி மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் சொந்த ஊர்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை

தாய்லாந்தில் குகையில் சிக்கி மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிய 12 சிறுவர்கள், கோயில்களில் வழிபாடு நடத்தினர். 16 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்களான 12 பேரும், அவர்களது பயிற்சியாளரும், கடந்த மாதம் 23 ஆம் தேதி கனமழை வெள்ளத்தினால் தாம் லுவாங் மலையில் உள்ள...

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சிறுவர்களும், பயிற்சியாளரும் உற்சாகத்துடன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர்.  ச்சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் குகைக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி பயிற்சியாளருடன் சென்ற இளம் கால்பந்து அணி வீரர்கள்...

தாய்லாந்தில் குகையில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பிரிட்டன் வீரரை விமர்சித்ததற்காக எலன் மஸ்க் வருத்தம்

தாய்லாந்தில் குகையில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பிரிட்டன் வீரரை விமர்சித்ததற்காக டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் வருத்தம் தெரிவித்தார். குகையில் சிக்கியோரை மீட்பதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் சிறிய ரக நீர்மூழ்கி போன்ற ஒரு அமைப்பு தயார் செய்யப்பட்டது. இந்த...

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 96 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு 96 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன....

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறார்களுக்கு கால்பந்து இறுதி போட்டி நேரலையைக் காண வாய்ப்பில்லை..!

உலகம் முழுவதும் கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலோடு உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் கண்டு களிக்கும் நிலையில், தாய்லாந்து குகையில் சிக்கி மீட்கப்பட்ட கால்பந்தாட்ட அணி சிறுவர்கள் அந்த நேரலையைக் காண மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின், சிறுவர்களின் கால்பந்தாட்டக்...