​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயலாற்றிய 12 MP-க்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட 12 எம்.பி.க்களுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சன்சேட் ரத்னா விருதுகளை வழங்கி கவுரவித்தார். நாடாளுமன்றக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பது, கேள்விகள் எழுப்புவது, ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் சன்சேட் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கடந்த ஆண்டு மக்களவை...

உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க ஆதரவு - பன்வாரிலால் புரோகித்

மாநில ஆட்சி மொழியை உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை, தாம் ஆதரிப்பதாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய உயர்நீதிமன்றங்களில், மாநில மொழிகளை வழக்காடும் மொழியாக கொண்டுவருவதற்கு...

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை பணி பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து உறுதி மொழியும் ஏற்றார்

சிவகங்கையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சிவகங்கை பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் உறுதி மொழி ஏற்றுக்...

கிரிக்கெட் விளையாட்டில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது : ஆளுநர் பன்வாரிலால்

கிரிக்கெட் விளையாட்டில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக, ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்திருக்கிறார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாகையர் கோப்பையை வழங்கி பேசிய அவர் இவ்வாறு...

கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குவதாகவும் கல்வித் துறையில் பெண்களின் ஆதிக்கம் உள்ளதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் புதுமையான உருமாற்றம் என்ற தலைப்பில் கருத்தரங்கை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடக்கிவைத்தார். 850 பல்கலைக்கழகங்களையும் 42ஆயிரம் கல்லூரிகளையும்...

ஜனவரி 2ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கும் என அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 2-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இது தொடர்பாக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைச் செயலாளர் சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக ஆளுநர் சட்டப்பேரவைக் கூட்டத்தை ஜனவரி 2-ஆம் தேதி கூட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்றைய தினம்...

தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் புரோகித் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். ஜமால் முகமது என்ற தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட ஆட்சியர் ராஜா மணி உள்ளிட்டோர்...

தமிழக மக்களின் உணர்வுகளை, ஆளுநர் டெல்லிக்கு எடுத்துக் கூறுகிறார் - கடம்பூர் ராஜூ

அடிமையாக இருந்த நாட்டு மக்களுக்கு மகாகவி பாரதியார் விடுதலை உணர்வை ஊட்டியதுபோல, தமிழர்களின் உணர்வை, மத்திய அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எடுத்துக் கூறுவதாக, அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெறும்...

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருக்கக் கூடாது - வைகோ

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருக்கக் கூடாது என்பதற்காகவே, நாளை போராட்டம் நடத்த இருப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய வைகோ, பேரறிவாளன்...

கலாச்சாரத்தையும், கல்வியையும் பேணிகாக்க வேண்டியது முக்கியம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

கலாச்சாரத்தையும், கல்வியையும் பேணிகாக்க வேண்டியது மிக முக்கியம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரிலுள்ள அம்மா அரங்கில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடி மக்களுக்காக இயங்கி வரும்  தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக நடைப்பெற்ற  இசை நிகழ்சியில் ஒன்றில் தமிழக...