​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாஜகவினரின் ‘காவலர்’ பிரச்சாரத்தை விமர்சித்த கெஜ்ரிவால்

தங்களது குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டும் எனக் கருதுபவர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கவேண்டும் வேண்டும் எனவும், பாஜகவினர்போல காவலர்களாக மட்டுமே ஆகவேண்டும் என விரும்பினால் பாஜகவுக்கு வாக்களிக்கலாம் எனவும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாஜகவினர் தங்களை காவலர்கள் எனக் கூறி தேர்தல் பிரச்சாரத்தில்...

ஆம் ஆத்மியுடன் கூட்டணியா? மறுத்த ஷீலா தீக்சித்

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷீலா தீக்சித் தெரிவித்துள்ளார். டெல்லியில், காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து இம்முறை தேர்தலை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ்...

வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி..!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் பிரதமர் நரேந்திர மோடியும் பிஜேபி தலைவர் அமித் ஷாவும் நாட்டின் பொருளாதாரத்தையும்...

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மார்ச் ஒன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற குறுகிய கால விவாதத்தின் போது அவர் பேசினார். அப்போது, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதை...

நாராயணசாமியின் போராட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு

புதுச்சேரி வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாராயணசாமியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அவருடன் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் வந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரில்வால், பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுக்கவே ஆளுநர்களை மோடி அரசு...

நாராயணசாமியை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புதுச்சேரியில் போராட்டத்தில் பங்கேற்கிறார்

துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை ஆதரித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புதுச்சேரியில் போராட்டத்தில் பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிருப்தி உருவாகியுள்ள நிலையிலும் துணை நிலை...

காங். கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சிக்கு இடமில்லை?

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கூட்டணிக்குத் தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த போதும் காங்கிரசுக்குள் நீடிக்கும் எதிர்ப்பு காரணமாக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம் பெறுமா என்ற கேள்வி...

பிரதமர் மோடியை சாடிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

எங்கே கையெழுத்திட வேண்டும் என்பதைக் கூட அறியாதவரை அடுத்த முறை பிரதமராக்கி விட வேண்டாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  பாஜகவுக்கு எதிரான கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒரே அணியாக திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு இது தொடர்பாக பேச்சு நடத்த நேற்று கெஜ்ரிவால்...

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபட்டுவிடும் - அரவிந்த் கேஜ்ரிவால்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபட்டுவிடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாபில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் எனத் தெரிவித்தார். இன்னும் 12நாட்களில்...