​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போகியன்று எரிக்கப்படும் டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

சென்னையில் போகி பண்டிகையன்று டயர் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்படுவதைத் தடுக்க விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிகர் தொடங்கி வைத்தார். அப்போது கல்லூரி மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  இந்த வாகனங்கள்...

சீனாவில் பிரம்மாண்ட விளம்பரப் பலகை சரிந்து விழுந்து விபத்து

சீனாவில் பிரம்மாண்ட விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஜிலின் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றின் முன்பாக விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. காற்றின் வேகத்தில் அந்தப் பலகை அசைந்து கொண்டிருந்தது. அப்போது அதனைக் கடந்து செல்ல முயன்ற 4 பேர்...

அமெரிக்காவில் இனவெறியால் சீக்கியர் ஒருவர் தாக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை

அமெரிக்காவில் இனவெறியால் சீக்கியர் ஒருவர் தாக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலிஃபோர்னியாவில் நேற்று பிரச்சார விளம்பரப் பலகைகளை சாலையோரம் அமைத்துக் கொண்டிருந்த 50 வயதான சீக்கியரை, வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் சரமாரியாகத் தாக்கியதோடு, இங்கு யாரும் சீக்கியர்களை...

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காலை 7.47 மணியளவில் லேசான நிலநடுக்கம்...

சேலம், தருமபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மூன்று புள்ளி மூன்று ரிக்டர் அளவுக்கு இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாநகரில் கோட்டை, கன்னங்குறிச்சி, கோரிமேடு, கோம்பைப்பட்டி, பட்டைக்கோவில், நாராயண நகர், அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய பகுதிகளிலும், சேலம்...

விளம்பரத்துக்காக அணிந்த நகையைத் திருப்பித் தரவில்லை என நடிகை ஹீனாகான் மீது LOL நகை நிறுவனம் குற்றச்சாட்டு

விளம்பரத்துக்காக அணிந்த 12லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையைத் திருப்பித் தரவில்லை என்று நகைநிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டை நடிகை ஹீனாகான் மறுத்துள்ளார். நகை விளம்பரத்துக்காக 12லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை அணிந்த ஹீனாகான், விளம்பர நிகழ்ச்சிக்குப் பின் அதைத் திரும்ப ஒப்படைக்கவில்லை என எல்ஓஎல்...

அரசு இடங்களில் விளம்பரப் பலகை வைப்பதற்கான சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தமிழகத்தில் அரசு இடங்களில் விளம்பரப் பலகை வைப்பதற்கான சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் விளம்பரப் பலகைகளை அமைக்க, அரசே உரிமை வழங்குவது குறித்த சட்டமுன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திங்களன்று தாக்கல் செய்தார். மானிய கோரிக்கை விவாதத்துக்குப்...

ராட்சத விளம்பரப் பலகை மீது ஏறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம்

சென்னை விமான நிலையம் அருகே ராட்சத விளம்பரப் பலகை ஒன்று உள்ளது. அந்த இடத்திற்குள் செய்தியாளர்கள் போல் நுழைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் யாரும் எதிர்பாராத நேரத்தில் விளம்பரப் பலகையில் மேல் ஏறி கருப்புக் கொடிகளுடன் முழக்கங்களை எழுப்பினர். போலீசார் மேலே ஏறினால்...

அனுமதி பெறாமல் விளம்பரப் பலகை வைத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை

உரிய அனுமதி பெறாமல் பேனர்கள், விளம்பரத் தட்டிகள் வைத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், விளம்பர பலகைகள் வைக்க கட்டட உரிமையாளர்கள் அனுமதியளித்தாலும் உரிமம் பெறாமல் தனியார் நிறுவனங்கள்...