​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திடீர் மழையால் சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்

விருத்தாசலத்தில் பெய்த திடீர் மழையால் சுமார் 20 ஆயிரம் நெல் முட்டைகள் நனைந்து சேதம் ஆகியுள்ளன. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிகளில் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அந்த...

மளிகை கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் வசூல் செய்யும் சிசிடிவி காட்சிகள்

சென்னை செம்மஞ்சேரியில் மளிகை கடையில் பட்டாக் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்தவனை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். கையில் பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டு செல்லும் அவன், மளிகை கடைக்காரரை பணம் கேட்டு மிரட்டும் சிசிடிவி காட்சிகளை போலீசார்...

ரூ 10க்கு சேலை கிடைப்பதாக பரவிய தகவல்

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பத்து ரூபாய்க்கு சேலை விற்பனை செய்யப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கில் பெண்கள் திரண்டதில் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பத்து ரூபாய்க்கு புடவை கிடைப்பதாக  பரவிய தகவலால் கல்லூரி மாணவிகள் முதல் முதிய பெண்கள்...

தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் இருந்து கிடைக்கும் விதைக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தளில் இருந்து கிடைக்கும் விதைக்கு நல்ல விலை கிடைப்பதால், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கள்ளிமந்தயம், கப்பல்பட்டி, அம்பிளிக்கை, பொட்டிக்காம்பட்டி, ஆகிய கிராமங்களில் 5,000 ஏக்கரில் செங்காந்தள் பயிரிடப்பட்டுள்ளது. 6...

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு, பெருமாள் கோவில்பட்டி, சின்னாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில், வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்தாண்டை காட்டிலும் தற்போது விளைச்சல் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ...

டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொள்ளை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, நேற்றிரவு, டாஸ்மாக் ஊழியர் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு இளைஞர்களை, அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்த போலீசார், பணத்தையும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.  அரூர்...

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு

ரேஷன் கார்டுகளில் இடம் பெற்றுள்ளவர்களின் கைரேகையை பதிவுக்கான கருவிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க அவர் தாக்கல் செய்த அறிக்கையில், கைரேகை பதிவு செய்வதற்கான கருவிகள் நிறுவிய பின் உறுப்பினர்கள்,...

பச்சை மிளகாய் விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைவு

திண்டுக்கல்லில் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக பச்சை மிளகாய் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள காப்பிளியபட்டி, கோவுகவுண்டன்பட்டி, பெரியகோட்டை கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது. அங்கு அறுவடை செய்யப்படும் மிளகாய்,...

பட்டினப்பாக்கம் மீனில் ரசாயணம் கலப்பா ? அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களில் ரசாயன நாற்றம் வீசுவதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  சென்னை பட்டினப்பாக்கம் மீன்மார்க்கெட்டில் மீன்கள் வாங்க மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்..! இங்கு மீன்கள் நன்றாக இருக்கும்...

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

நெல்லை திருக்குறுங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில், திருக்குறுங்குடி, களக்காடு,மாவடி, மலையடிபுதூர், கலுங்கடி, கட்டளை ஆகிய பகுதிகளில் தற்போது நெல்அறுவடை நடந்து வருகிறது. இப்பகுதிகளில் அரசு நெல் கொள்முதல்நிலையங்கள் இல்லாததால், அறுவடை செய்யும்...