​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கணக்கு கேட்ட பாஜக தொண்டர்... குத்திக் கொன்ற நிர்வாகி...

கோவையில் பாஜக உறுப்பினரை மதுபாட்டிலை உடைத்து குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள அக்கட்சியின் இளைஞரணி நிர்வாகியை போலிசார் வலைவீசித் தேடி வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு வசூல் செய்த பணத்தைக் கொண்டு நடத்தப்பட்ட மதுவிருந்தில் கணக்கு கேட்டதால் நடந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது...

விநாயகர் சிலைகள் கரைக்கும் போது பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர்

மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் போது பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ரெய்காட், ஜல்னா மற்றும் புனே பகுதிகளில் சிலைகளைக் கரைக்கும் போது நீரில் மூழ்கியும் சிலைகளால்...

மும்பையில் விமர்சையாக நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலம்

மும்பையில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற விநாயகர் விசர்ஜனம் வழக்கமான உற்சாகத்துடன் விமரிசையாக நடைபெற்றது.  நாட்டின் வர்த்தக தலைநகராக விளங்கும் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் உலக புகழ்பெற்றது.... தீபாவளியைப் போன்றே, விநாயகர் சதுர்த்தி, மும்பையில் எப்போதும் களைகட்டி காணப்படும்... இந்த வகையில்,...

விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் மடிந்த

மும்பையின் ஜூஹூ கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின், நூற்றுக்கணக்கான மீன்கள், ஆமைகள், நண்டுகள்,  நீர்ப்பாம்புகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் பூசப்பட்ட ரசாயன வண்ணங்கள், பல லட்சம் பக்தர்கள் பேரணியாக வந்த போது பயன்படுத்திய...

பலத்த காவல்துறை பாதுகாப்புக்கு நடுவே அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காவல்துறையினரின் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடைபெற்று முடிந்தது. அண்மையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது கல்வீச்சு, கலவரம் மூண்டது. இதனையடுத்து முத்துப்பேட்டையில் இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்துக்கு...

திருவாரூரில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் 2000 போலீசார்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியையொட்டி முத்துப்பேட்டையில் 19 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. 5ஆம் நாளான இன்று தம்பிக்கோட்டை வடகாடு பாமணி...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கோவையில் நேற்று மூன்றாவது நாளாக 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. தெப்பக்குளம் மைதானத்தில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், முத்தண்ணன் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன....

குடிபோதையில் காவலரைத் தாக்கிய இரு இளைஞர்கள் கைது

சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் குடிபோதையில் காவலரைத் தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு நடைபெற்றபோது அங்கு ஜெயக்குமார் என்ற காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த இளைஞன் ஒருவன் அவரை இடித்து...

நீதிமன்றத்தை இழிவாக பேசிய புகாரில் ஹெச்.ராஜா நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்தை இழிவாகப் பேசியதாக பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா மீது வழக்குப் பதிந்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை 4வாரங்களுக்குள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.  கடந்த சனிக்கிழமை புதுக்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச்.ராஜா, நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் இழிவாகப்...

போச்சம்பள்ளி அருகே மணல் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மணல் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பலியானார். விபத்தை ஏற்படுத்திய லாரிக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி தனியார் பள்ளியில் நுழைந்து கிராமத்தினர் தாக்குதல் நடத்தினர். ஆள்ரம்பட்டியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தனது நண்பர்கள்...