​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை என்பதே கிடையாது -அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை என்பதே கிடையாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ். வளாகத்தில் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,...

ஊதியக் குழு பரிந்துரைகள் போது மக்கள், அரசு ஊழியர்கள் இடைவெளி அதிகரிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின் போதும் அரசு ஊழியர்களுக்கும் மக்களுக்குமான வருமான இடைவெளி அதிகரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நீதிபதிகள், அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென்ற விதியை ஏன் கொண்டுவரக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜாக்டோ - ஜியோ...

CTS நிறுவனத்தினரிடம் லஞ்சம் - உலக அரங்கில் தமிழர்களுக்கு தலைகுனிவு - மு.க.ஸ்டாலின்

சிடிஎஸ் எனும் ஐ.டி. நிறுவனத்தினரிடம் தமிழக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் உறுதியான சம்பவம், உலக அரங்கில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காக்னிசன்ட் நிறுவனத்தின் கிட்ஸ் கேம்பஸ் கட்டிடத்தை...

எல்.ஐ.சியின் "மைக்ரோ பச்சத்" எனும் புதிய நுண் காப்பீட்டு திட்டம் அறிமுகம்

எல்.ஐ.சியின் "மைக்ரோ பச்சத்" ((Micro bachat ))என்னும் புதிய நுண் காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி.-யின், தென் மண்டல அலுவலகத்தில் இந்த திட்டத்தை அதன் மண்டல மேலாளர் அனில் குமார் அறிமுகப்படுத்தினார். நுண் காப்பீட்டுத் திட்டங்களில்...

அட்டைகள் உற்பத்தி நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக தீ

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே அட்டைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதமடைந்தன. தையூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அட்டை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு அதிகாலை 4.30...

பாகிஸ்தான் தங்கள் அன்புக்குரிய நாடு என சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்

பாகிஸ்தான் தங்கள் அன்புக்குரிய நாடு என சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார். முதல் அரசுப் பயணமாக நேற்று பாகிஸ்தான் சென்ற முகமது பின் சல்மானுக்கு, தனது இல்லத்தில் அந்நாட்டு இம்ரான் கான் விருந்தளித்தார். இதைத் தொடர்ந்து இருநாடுகள்...

இந்திய ரூபாயில் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது அமெரிக்க டாலர்களிலும் கொள்ளை அடிக்கத் துவங்கி விட்டனர் : ஸ்டாலின்

தமிழகத்தில் இதுவரை இந்திய ரூபாயில் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது அமெரிக்க டாலர்களிலும் கொள்ளை அடிக்கத் துவங்கி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்....

இந்தியாவின் 733 அணைகளைப் பாதுகாக்க ரூ.11 ஆயிரம் கோடி நிதி

இந்தியாவில் உள்ள 733 பெரிய அணைக்கட்டுகளை பாதுகாக்க உலக வங்கி 11ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க முன்வந்துள்ளது. தமிழகத்தில் மேட்டூர், சாத்தூர், பரம்பிக்குளம், பெருஞ்சாணி , வைகை உள்ளிட்ட116 அணைகள் உள்ளன. இதே போல் கர்நாடகத்தில் 231 அணைகளும், ஆந்திராவில் 167...

திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள துணிக்கடை வாசலில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள துணிபண்டல்கள் திருட்டு

சென்னை திருவொற்றியூரில் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள துணிக்கடை வாசலில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணி பண்டல்களை திருடி சென்றவரை சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். காலடிப்பேட்டையில் உள்ள துணிக்கடை முன்பு துணி பண்டல்கள் இறக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று...

ரூ 10க்கு சேலை கிடைப்பதாக பரவிய தகவல்

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பத்து ரூபாய்க்கு சேலை விற்பனை செய்யப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கில் பெண்கள் திரண்டதில் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பத்து ரூபாய்க்கு புடவை கிடைப்பதாக  பரவிய தகவலால் கல்லூரி மாணவிகள் முதல் முதிய பெண்கள்...