​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பறக்கும் படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்திய வாகன தணிக்கையில் 30 லட்சம் ரூபாய் பறிமுதல்

பறக்கும் படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  நடத்திய வாகன தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.   விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முறம்பு சோதனை சாவடியில் துணை வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையிலான...

சத்தியமங்கலம் அருகே காய்ந்த மரம் செடிகளில் பரவும் தீயால் வனப்பகுதி நாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர், கேர்மாளம் வனச்சரகங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மேட்டுப்பாளையம் சாலையையொட்டியுள்ள விளாமுண்டி பகுதியில் காய்ந்த மரம் செடி கொடிகளில் தீ பரவியதால், தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயைக்...

கோவையில் யானையை கொல்ல முயன்ற வழக்கில் நான்கு பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை, அபராதம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை  வனப்பகுதியில் தந்தத்திற்காக காட்டு யானையை கொல்ல முயன்ற நான்கு பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யானை நடமாட்டம் அதிகம் காணப்படும்...

ATM மையத்தில் உதவி செய்வதாகக் கூறி, ரூ. 42,000 கொள்ளை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் புதிய ஏடிஎம் அட்டையின் செயல்பாட்டை பரிசோதனை செய்து தருவதாகக் கூறி வாங்கி 44 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவனை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். தென் திருப்பதி பகுதியைச் சேர்ந்த தங்கமணி மேட்டுப்பாளையத்திலுள்ள ஸ்டேட் பேங்க்...

நீலகிரியில் ஊதா நிற 'ஜகரண்டா' மலர் சீசன் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரியில் ஊதா நிற 'ஜகரண்டா' மலர் சீசன் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆங்கிலேயர்களால் பிரேசில் நாட்டிலிருந்து நாற்றுகள் கொண்டு வரப்பட்டு குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மலர் நடவு செய்யப்பட்டு தற்போது...

நீலகிரி, நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை

நீலகிரி, நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும் இரவில் இதமான சூழலும் இருந்து வந்தது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன்...

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

1532 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். விவசாயிகளின் 70 ஆண்டுகால கோரிக்கையான இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.  திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான...

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் - அடிக்கல்..! 60 ஆண்டுக்கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களின் 60 ஆண்டு கால கோரிக்கையாக உள்ள அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு, அவிநாசி புதுப்பாளையத்தில் இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த முதலமைச்சர் எடப்பாடி...

சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா-அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார். வெள்ளியங்காடு முதல் மஞ்சூர் வரையிலான 42 கிலோமீட்டர் தூர சாலையினை மேம்படுத்த தமிழக அரசு 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான...

வழி தெரியாமல் தோட்டத்துக்குள் சுற்றித்திரிந்த யானை குட்டி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்தபோது வழி தெரியாமல் சுற்றித்திரிந்த யானை குட்டியை வனத்துறையினர், அதன் தாய் யானையிடம் பத்திரமாக சேர்த்தனர்.மேட்டுபாளையம் வனச்சரகத்தை ஒட்டியுள்ள நெல்லித்துறையை சேர்ந்த சின்ராஜ் என்பவரது தோட்டத்துக்குள் யானை கூட்டம் புகுந்தது. யானைகள் வனப்பகுதிக்குள் சென்று...