​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகினார் உர்ஜித் பட்டேல்

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து  உர்ஜித் படேல்  ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர் விலகல் முடிவை எடுத்துள்ளார்.  ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே பனிப்போர் நீடித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி...

மோடியின் ஆட்சியில் இந்தியா உறுதியான வளர்ச்சி அடைந்துள்ளது : சர்வதேச நாணய நிதிய தலைமைப் பொருளாதார வல்லுநர் கருத்து

பிரதமர் மோடியின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இந்தியா உறுதியான வளர்ச்சியை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் மாரிஸ் ஆப்ஸ்ட்ஃபீல்ட் (Maurice Obstfeld)   தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசுகையில் மோடி அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் கொண்டுவந்த ஜி.எஸ்.டி. மற்றும் திவால்...

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாக அதிகாரி சிசிடிவி கேமரா காட்சி குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகிய அவர், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் குறித்து...

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜராகிப் பிரமாணப் பத்திரம் செய்தார்.  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளை செப்டம்பர்...

முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது சிகிச்சை தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அறிக்கை பெறப்பட்டதா என்றும்...

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 1 மணி நேரத்திற்குள் 1 கோடி ரூபாய் வரை கடன், புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடனுக்கான ஒப்புதல் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, சிறு தொழில்...

ஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு - முன்னாள் ஆளுநரின் தனிச் செயலாளர் வாக்குமூலத்தால் சர்ச்சை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே அடுத்த முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு நடைபெற்றதாக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச் செயலாளர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி...

உயர்மட்ட ஊழல் பட்டியலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : ரகுராம் ராஜன்

உயர்மட்ட அளவில் நடந்துள்ள ஊழல்களின் பட்டியலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியும்,  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் நாடாளுமன்ற குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். வாராக்கடன் அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்குமாறு முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான...

வங்கிகளுக்கு மிகப்பெரிய பேராபத்து காத்திருக்கிறது -ரகுராம் ராவஜன்

நடுத்தர மற்றும் குறுந்தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில் பெரும்பாலானவை வாராக் கடனாகவே மாறக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் அரசு இப்பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழுவிற்கு அவர் அனுப்பிய 17 பக்க கடிதத்தில்,...

தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்

தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவை அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று சந்தித்ததாக, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ரமேஷ் சந்த் மீனா வாக்குமூலம் கொடுத்துள்ளார். வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா ஆறுமுகசாமி ஆணையத்தில்...