​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திரா காந்தியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவிடம் அமைந்துள்ள டெல்லியின் சக்தி ஸ்தலத்திற்கு...

"பணமதிப்பிழப்பு நடவடிக்கை" ஜேட்லி விளக்கம் - மன்மோகன் குற்றச்சாட்டு

2 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை,  பொருளாதாரத்தை முறைப்படுத்த உதவியதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கையின் தீங்கான விளைவுகள் இந்திய பொருளாதாரத்திற்கு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு...

பணமதிப்பிழப்பு பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் - மன்மோகன்

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 2016நவம்பர் எட்டாம் நாள் ஆயிரம் ரூபாய் மற்றும் அப்போது புழக்கத்தில் இருந்து ஐந்நூறு ரூபாய் பணத்தாள்கள் செல்லாது எனப் பிரதமர் நரேந்திர மோடி...

RBI ஆளுநருக்கு மத்திய நிதி அமைச்சர் தான் உயர் அதிகாரி: 2014-ல் மன்மோகன் கூறிய கருத்து தற்போது வெளியானது

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு மத்திய நிதி அமைச்சர் தான் எப்போதுமே உயர் அதிகாரி என்று பிரதமராக இருந்த போது மன்மோகன் சிங் கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்புடைய முடிவுகளை எடுப்பதில் அந்த வங்கியின் ஆளுநருக்குத் தன்னாட்சி அதிகாரம்...

ராம்லீலா நிகழ்ச்சியில், ராவண உருவபொம்மையை அம்பெய்து எரித்தார் பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி ராவணன் உருவபொம்மையை அம்பெய்து எரித்தார். ஆண்டுதோறும் டெல்லியில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்தும், பிரதமர் மோடியும் பங்கேற்றனர். லவன்-குஷன் நிகழ்ச்சியும், ராமர்...

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார்

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். வியாழக்கிழமை அன்று டெல்லி வந்த ரணிலுக்கு அரசு சார்பில் முறையாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையில், அவர்...

இந்தியா வந்துள்ள ராஜபக்சேவுடன் மன்மோகன் சிங், ராகுல் காந்தி சந்திப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் உள்ள அவர், நேற்று பிரதமர்...

வங்கிகளில் வராக்கடன் அதிகரிப்புக்கு ஐ.மு.கூட்டணி ஊழலே காரணம் - ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்

வங்கிகளின் வராகடன் அதிகரிப்புக்கு, தகுதி இல்லாத, ஊழல் மலிந்த வங்கிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். வங்கிகளின் வராகடன் 10 லட்சம் கோடி...

பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு

பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய இதுவரை பாஜக அரசு...

நாட்டிற்கு நேரு வழங்கிய பங்களிப்பை மறைத்துவிட முடியாது - மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம்

மத்திய அரசு வரலாற்றைத் திரிக்கும் நடவடிக்கைகள் மூலம் நாட்டுக்கு ஜவகர்லால் நேரு அளித்த பங்களிப்பை மறைத்துவிட முடியாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லி தீன்மூர்த்தி பவனில் உள்ள ஜவகர்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இந்தியாவின் வேறு பிரதமர்கள்...