​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் உறுதி

மத்தியில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கினார். திருவாரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணனுக்கு...

மக்களவைத் தேர்தல்: பிரியாணி உள்ளிட்ட பொருட்களுக்கு விலைப் பட்டியல் நிர்ணயம்..!

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது செலவிட்டு வாங்கும் பிரியாணி உள்ளிட்ட பொருட்களின் விலைப்பட்டியலை நிர்ணயித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. செலவின பார்வையாளர்கள்: மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரையும், சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் 28 லட்சம் ரூபாய்...

ஒரே நாளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 18 பாஜகவினர் விலகல்

அருணாச்சல பிரதேசத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த 18 பேர் ஒரே நாளில் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் இணைத்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியால் அக்கட்சியிலிருந்து விலகிய...

மக்களவை தேர்தலில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி களத்திலேயே கிடையாது - ராஜேந்திர பாலாஜி

மக்களவை தேர்தலில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி களத்திலேயே கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில், விருதுநகர் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரசாரத்தை தொடங்கினார். அப்போது,...

வானில் திடீரென உருவான பிரம்மாண்ட துளை

ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அல் ஐன் ((Al ain)) நகர் வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மற்றொரு உலகுக்கான வாயில் என பலரும் இதை வருணிக்கத் தொடங்கி விட்டனர்.  ஆனால்...

நாடு பாதுகாப்பாக இருக்க வலிமை பொருந்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாடு பாதுகாப்பாக இருக்க வலிமை பொருந்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பா.ம.க....

இரவு நேரத்தில் தீப்பிடித்து நூற்றுக்கணக்கான குடிசைகள் கருகின

பீகார் மாநிலம் முசாபர்புர் பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் இரவில் தீப்பிடித்தது. இதில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின.  ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டையும், உடைமைகளையும் பறிகொடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என்றும்...

வாக்குக் கேட்டு வேட்பாளர்கள் யாரும் ஊருக்குள் வரக்கூடாது என பேனர்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வாக்குக் கேட்டு வேட்பாளர்கள் யாரும் ஊருக்குள் வரக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. அரங்கனூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  குடும்பங்கள் உள்ளன. சாலை, குடிநீர் ,சுகாதாரம் மருத்துவமனை, கல்வி, போக்குவரத்து போன்ற எந்த வசதியும் செய்யாமல்...

நெல்லையில் தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படையினர் வருகை

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நெல்லையில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். நெல்லையில் பாதுகாப்பு பணிகளுக்காக இந்தோ, திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்க...

மொசம்பிக் நாட்டில் புயல் , வெள்ளத்தால் 1000 பேர் பலி

புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை இடை என்ற புயல் கடந்த வியாழக்கிழமை மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது....