​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2019 தேர்தல் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி

மக்களவை தேர்தல் வெற்றி என்பது, நேர்மைக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதை, இந்தாண்டு தேர்தல் முடிவுகள் உலகிற்கு எடுத்துக்காட்டியிருப்பதாகவும் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் கூறியிருக்கிறார்.  ஜப்பான் நாட்டில்...

நாளை தொடங்கும் சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்ததொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 8ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது நான்கு நாட்கள் விவாதம் நடைபெற்றது. மக்களவைத்...

ராகுல் காந்தி வீட்டு முன் போராட்டம்

ராகுல் காந்தி ராஜினாமாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் அவரது வீட்டு முன் இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். மக்களவைத் தேர்தல் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். அதை...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி 2019 -20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது....

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லியில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க யமுனா நதி நீரை பயன்படுத்திக் கொள்வதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த கெஜ்ரிவால், மோடி மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று...

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் உறுதி

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் மாற்றமில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியை சந்தித்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முடிவு செய்தார். ராகுல்...

திமுகவின் உதவியை எதிர்பார்த்திருக்கும் காங்கிரஸ் கட்சி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்காக திமுகவின் உதவியை காங்கிரஸ் எதிர்நோக்கியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக அசாமில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மன்மோகனின் பதவிக் காலம் அண்மையில் நிறைவுபெற்றது. காங்கிரசிற்கு போதிய பலம் இல்லாததால் அஸ்ஸாமில் இருந்து அவர்...

நடிகர் சன்னிதியோலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனும், நடிகருமான சன்னி தியோலுக்கு தேர்தல் செலவுகளை வரம்பு மீறி செய்ததாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குருதாஸ்புர் மாவட்ட தேர்தல் அதிகாரி விபுல் உஜாவல் இது தொடர்பாக சன்னி தியோலுக்கு அனுப்பிய நோட்டீசில், தேர்தல் செலவுக்கு 70...

மீண்டும் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி ..!

மக்களவைத் தேர்தலை ஒட்டி நிறுத்தப்பட்டஎனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மீண்டும் தொடரப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மன் கி பாத் நிகழ்ச்சி கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்ற...

14,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பு

கர்நாடக மாநிலத்தில் 14 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து அம்மாநில அரசு தள்ளுபடி செய்த கடன் தொகை மக்களவைத் தேர்தல் முடிந்த பின்பு  விவசாயிகளின் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளின் சுமார்...