​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்களவை தேர்தலை முன்னிட்டு 28 மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி திட்டம்

உத்தர பிரதேசத்தில் வரும் 28 ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி நாடு முழுவதும் 225 பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். மக்களவை தேர்தலை முன்னிட்டு 28 மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார். 45 வகையான மொழி பேசும் மக்களிடம் பிரச்சாரம்...

ஏழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் நிறுத்தி வைப்பு

மக்களவை தேர்தலையொட்டி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காணும் வரை 2,000 ரூபாய் நிதியுதவி திட்டத்துக்கு தடை...

அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல்

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர். வருகிற மக்களவைத் தேர்தலில், 20 தொகுதிகளிலும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,...

வாக்குப் பதிவுக்கு முந்தைய 48 மணி நேர காலகட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை - சமூகவலைத் தளங்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னர் 48 மணி நேரத்திற்கு எவ்வித தேர்தல் பிரச்சாரமும் அனுமதிக்கப்படாது என ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூகவலைத் தளங்கள் அறிவித்துள்ளன. இந்திய இண்டர்நெட் மற்றும் மொபைல் கூட்டமைப்பும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர், கூகுள், ஷேர்சாட், டிக்டாக்...

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினர், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினர், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். வேலூர் : வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளரும் அவரது தந்தையுமான துரைமுருகன் வாக்கு சேகரித்தார். தொண்டான்...

அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் உறுதி

மத்தியில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கினார். திருவாரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணனுக்கு...

சத்தீஸ்கரில் தற்போது பா.ஜ.க. எம்பிக்களாக உள்ளவர்களுக்கு சீட் மறுப்பு

சத்தீஸ்கரில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 10 பேருக்கும் மக்களவை தேர்தலில் சீட் வழங்குவதில்லை என பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், தற்போது எம்.பி.க்களாக உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் தொடர்ந்து...

மகாராஷ்ட்ர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜினாமா

மகாராஷ்ட்ர மாநில சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரான ராதாகிருஷ்ண விகே படில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரடி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான அவர், தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல்...

மக்களவை தேர்தலை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 750 பேர் கைது

மக்களவை தேர்தலை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 750 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை காவல்துறை பாதுகாப்பில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சேர்த்து 7 ஆயிரத்து 790 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 450 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என காவல்துறை அதிகாரிகள்...

பெரிய வியாழனையொட்டி தேர்தலை தள்ளிவைக்கக் கோரி மனு,தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பெரிய வியாழன் பண்டிகை காரணமாக, கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற கோரிய வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடத்தப்படவுள்ள...