​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முந்திரி மரங்கள் வெயிலில் காய்ந்து பூக்கள், பிஞ்சுகள் கருகின

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் தற்போது முந்திரி மரங்கள் துளிர்விட்டு பூ பூக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் கடும் வெயில் காரணமாக பூக்கள் கருகிவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். காமேஸ்வரம், பூவைத்தேடி, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கர்...

குடிநீர், மின்சார வசதி இல்லாமல் அவதிப்படும் மக்கள்

ஒடிசாவில் பானி புயல் தாக்கி ஒரு வாரத்துக்கு மேலாகியும் பல இடங்களில் மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஒடிசாவில் கடந்த 3ஆம் தேதியன்று பானி புயல் தாக்கியது. பூரி உள்ளிட்ட 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான வீடுகள்,...

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

ஒடிசாவில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனர். ஃபானி புயலின் கோர தாண்டவத்தால் ஒடிசா மாநிலம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. புயல் பாதித்த பகுதியில் ராணுவத்தினர், கடற்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு...

ஒடிசாவின் கரையோர மாவட்டங்களில் இருந்து 11 லட்சம் பேர் வெளியேற்றம்

ஃபானி புயல் இன்று கரையைக் கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பல இடங்களில் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஒடிசாவில் புயல் கரையைக் கடப்பதால் 10 ஆயிரம் கிராமங்களும், 52 நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து...

ஒடிசாவை அச்சுறுத்தும் ஃபானி

அதி தீவிர புயலான ஃபானி, மே 3 ஆம் தேதி கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் ஆந்திராவின் பல மாவட்டங்கள் சேதங்களைச் சந்திக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  ஒடிசாவின் பூரியில் இருந்து தெற்கு - தென் மேற்கே, 680 கிலோ...

அதிமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் திமுக தலைவர்...

புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி

நாகையில் புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு மானியத்துடன் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வனிதா,...

தேர்தலை அறிவித்து நிறுத்தியது ஆணையத்தின் நம்பிக்கையைக் குறைத்து விடும்-ஈஸ்வரன்

திருவாரூர் இடைத்தேர்தலை முதலில் அறிவித்துவிட்டுப் பின்னர் நிறுத்தியிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடும் எனக் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் கருத்துக் கேட்டு நிறுத்துவதற்குப் பதில், தேர்தலை...

கஜா புயலால் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்த படகுகளுக்கான நிவாரண தொகை உயர்வு

கஜா புயலால் சேதம் அடைந்த பைபர் படகுகளுக்கான நிவாரண நிதி ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய திருவையாறு திமுக எம்எல்ஏ...

புயல் பாதித்த பகுதிகளில் 99 விழுக்காடு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 99 விழுக்காடு வீடுகளுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாய பணிகளுக்கான மின் இணைப்புகள் 50 விழுக்காடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் தொய்வின்றி நடந்து...