​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேச வளர்ச்சிக்காக சோர்வின்றி பாடுபடுவோம் என மோடி உறுதி

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் மற்றும் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் அதில்...

நிதி ஆயோக் குழுவை மாற்றியமைக்க பிரதமர் மோடி ஒப்புதல்

நிதி ஆயோக் குழு கூட்டம் வருகிற 15ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அக்குழுவின் மறு சீரமைப்புக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.  கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முறையாக மோடி பிரதமரானபோது, திட்டக்குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார். இந்நிலையில், இரண்டாவது முறையாக...

தொழில் துறையினர், ஏற்றுமதியாளர்கள் மானியங்களை சார்ந்திருக்கக் கூடாது - பியூஷ் கோயல்

இந்திய தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மானியங்களை சார்ந்திருக்காமல், போட்டித்திறனை மேம்படுத்த ஆர்வம் செலுத்துமாறு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறையை கவனித்து வரும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் வர்த்தகத்துறைக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், எந்த லட்சியத் திட்டமும்...

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு

பெட்ரோலியப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் மிகவும் அதிகரித்து காணப்படும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைச்சர்கள் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், ஜெய்சங்கர்,நிர்மலா சீதாராமன், நிதி...

ரயில்வேயில் விபத்து இல்லாத நிலையை உருவாக்குவதே லட்சியம் - பியூஷ் கோயல் தகவல்

ரெயில்வே துறையில் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தும் தொடரும் என அந்த துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். ரெயில்வே அமைச்சகத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். ரெயில் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதுடன், அதிக சரக்குகளையும்...

அருண் ஜேட்லீயை இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் மோடி

உடல் நல பாதிப்பு காரணமாக கடந்த 18 மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் அருண் ஜேட்லீயை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தமக்கு ஓய்வளிக்கும்படியும் அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டாம் என்றும் கோரி பிரதமர் மோடிக்கு அருண் ஜேட்லீ கடிதம்...

நரேந்திரமோடி பதவி ஏற்கும் விழா - முதலமைச்சர், துணை முதலமைச்சர் விழாவில் பங்கேற்கின்றனர்

பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை காலை அவர்கள் இருவரும் டெல்லி புறப்பட்டு செல்ல இருக்கின்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் மோடி பதவி...

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை பதவியேற்பு

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவியேற்க உள்ள நிலையில், அவரை சந்தித்த பாஜக தலைவர் அமித் ஷா அமைச்சர்கள் பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டார். பிரதமர் மோடியை நேற்று மாலை அவருடைய இல்லத்தில் சந்தித்த அமித் ஷா சுமார் 4 மணி...

மத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லி மீண்டும் பொறுப்பேற்க மாட்டார்

மோடி தலைமையில் அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பு ஏற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம்...

ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர்

நதிநீர் இணைப்பு தொடர்பான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற நடிகர் ரஜினிகாந்த்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை அகற்றுவது குறித்துக் கூறியிருந்தாலும் அவர்களிடம் பேசி...