​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய பாஜக அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக அமித்ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி

மத்திய பாஜக அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓபிரையென் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மம்தா பானர்ஜி தலைமையிலான...

கர்நாடகாவில் சக எம்எல்ஏவை தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்

கர்நாடகாவில் சக எம்எல்ஏவை தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களை இழுக்க பாஜக திட்டமிட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...

பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது ஒரு நாடகம் - டிடிவி தினகரன்

பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது ஒரு நாடகம் என, டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திருச்சி  சுப்பிரமணியபுரத்தில்,  பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் தம்பிதுரை இவ்வாறு பேசி வருகிறார் என்று கூறினார். அதிமுகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு...

வாரணாசியில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில், ஹேமமாலினி, நடன நாடக அரங்கேற்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில், பிரபல நடிகை ஹேமமாலினி, நடன நாடகத்தை அரங்கேற்றி, பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான 3 நாள் மாநாடு வாரணாசியில் கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த...

யாரோடும் அதிமுக தற்போது கூட்டணி வைக்கவில்லை;ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே கூட்டணி குறித்து முடிவு - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக தற்போது யாரோடும் கூட்டணி வைக்கவில்லை என்றும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்ற மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா...

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் அமையும் : ராம்தாஸ் அத்வாலே

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். சமூக நீதித் துறை இணை அமைச்சரான அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ராம்தாஸ் அத்வாலே, டிடிவி தினகரன் அதிமுகவோடு இணைய வேண்டும் என்று...

மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை மம்தா பானர்ஜி கொன்றுவிட்டார் - அமித் ஷா

மேற்கு வங்கம் மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜனநாயகத்தை கொன்றுவிட்டதாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கம் மாநிலம் பக்தோக்ராவில் ((Bagdogra)) பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, கம்யூனிஸ்ட் ஆட்சியைப் போல, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியையும் அகற்ற...

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரசின் திட்டமிட்ட நாடகம் - ரவிசங்கர் பிரசாத்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்து முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரஸ் கட்சியால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட லண்டன் நாடகம் என மத்திய பாஜக அரசு தெரிவித்திருக்கிறது.  ஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம், திங்கட்கிழமை, லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், அமெரிக்காவில் வசிக்கும்,...

மக்கள் வரிப்பணம் கொள்ளைப்போவது, பாஜக ஆட்சியில் தடுத்து நிறுத்தம் - பிரதமர் மோடி

கடந்த நாலரை ஆண்டுகளில் மக்களின் வரிப்பணம் கொள்ளை போவது தடுக்கப்பட்டுள்ளதாகவும், 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் தின...

ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிட காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பம்

சோனியாவின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதி எம்பியாக உள்ளார். ஆனால் உடல்நலக்குறைவால் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ரேபரேலி தொகுதிக்கு சோனியா...