​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போலீசாரின் அலட்சியத்தால் பறிபோன உயிர் - தாயாரை இழந்து தவிக்கும் 3 வயது குழந்தை

நாகப்பட்டினம் வேளாங்கண்ணியில்  ரவுடி ஒருவனால், 28 வயது இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். போலீசாரின் அலட்சியம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.... நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த வேலவன் என்பவரது 28 வயது மனைவி...

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்பு

நாகை மாவட்டம் சீர்காழியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். அங்குள்ள பழமைவாய்ந்த நாகேஸ்வரமுடையார் கோவிலுக்குச் சொந்தமான இடம் ராமச்சந்திரன் என்பவருக்கு குடியிருப்புக்காக வழங்கப்பட்டது. ஆனால் இவர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததுடன் கோவில்...

பாலிமர் செய்தி எதிரொலியால், நாகை மாவட்டத்தில் பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

நாகை மாவட்டத்தில் பிரதபராமபுரம் ஊராட்சியில் கஜா புயலால் ஆற்றின் குறுக்கே மரப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதில் பொதுமக்கள் கழுத்தளவு தண்ணீரிலும் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்தும் செல்லும் அவலம் குறித்த செய்தி பாலிமர் தொலைக்காட்சியில் வெளியானது. இதையடுத்து உடனடியாக தற்காலிக பாலத்தை சரி...

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது

நாகப்பட்டினம் அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சுமார் 45 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை ரேடார் கருவியின் உதவியுடன் கடலோர காவல்படையினர்...

நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாகூர் தர்காவின் 462 ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மக்கள் பங்கேற்றனர். நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கந்தூரி விழாவின்...

கடலுக்கு செல்லும் போது தூண்களில் முட்டி படகுகள் சேதம் என மீனவர்கள் புகார்

நாகை துறைமுகம் அருகே முழுமையாக அகற்றப்படாத தூண்களால் மீன்பிடி படகுகள் சேதமாகி வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடுவையாற்று நீர் கடலில் கலக்கும் பகுதியில், தங்களது படகுகளை மீனவர்கள் நிறுத்தி வருகின்றனர். இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட...

தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவிலில் தேரோட்டம்

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். வைத்தீஸ்வரன் கோவிலில் பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு தை செவ்வாய் உற்சவம் கடந்த 2ம்...

நாகையில் சம்பா சாகுபடி அறுவடை பணிகள் தீவிரம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்ற போதிலும் கஜா புயலால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருப்பூண்டி ,சோழவித்யாபுரம்,கீழ்வேளூர் அகரகடம்பனூர்,செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சம்பா சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று...

புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி

நாகையில் புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு மானியத்துடன் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வனிதா,...

வடபாதி மகா மாரியம்மன் கோவில் தீமிதி செடல் உற்சவ திருவிழா

நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற வடபாதி மகா மாரியம்மன் கோவில் தீமிதி செடல் உற்சவ திருவிழாவில் பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. மிகவும் பழமையான இந்தக் கோவிலில் தைமாதம் கடைசி வெள்ளியன்று தீமிதி செடல் உற்சவ திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான...