​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்

மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோராவும், தேர்தல் ஆணையராக அசோக் லாவேசாவும் உள்ளனர். மூன்றாவது ஆணையர் பதவி கடந்த டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த நிலையில்...

கூட்டுறவு சங்க தேர்தலை டிஜிட்டல் முறையில் நடத்தலாமா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை டிஜிட்டல் முறையில் நடத்தலாமா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும், பல கூட்டுறவு சங்கங்களில், பலர் போட்டியின்றி தேர்வு செய்யபட்டுள்ளனர் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த...

தமிழ்நாடு கூட்டுறவு சங்களுக்கான தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

தமிழ்நாடு கூட்டுறவு சங்களுக்கான தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் விதிகளை பின்பற்றி தேர்தல் மூலம்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என மனுதாரர் தெரிவித்திருந்தார். லால்குடியை அடுத்த திருமணமேடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில்...

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் நடத்தக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதில்லை என...

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு வாய்ப்பு, தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனுக் கொடுக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் 4-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பின்பற்றப்பட வேண்டும் என...

உள்ளாட்சித் தேர்தல் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தி முடிக்கப்படும் - மாநிலத் தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலத் தேர்தல்...

வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை-சுனில் அரோரா திட்டவட்டம்

மின்னணு வாக்கு எந்திரங்களில் இருந்து வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  மின்னணு வாக்கு எந்திர முறை குறித்து பல எதிர்க்கட்சிகள் குறைகூறி வருவதோடு, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்...

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரசின் திட்டமிட்ட நாடகம் - ரவிசங்கர் பிரசாத்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்து முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரஸ் கட்சியால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட லண்டன் நாடகம் என மத்திய பாஜக அரசு தெரிவித்திருக்கிறது.  ஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம், திங்கட்கிழமை, லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், அமெரிக்காவில் வசிக்கும்,...

பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளித்தால் தகுதி நீக்கம் - தேர்தல் ஆணையம் வலியுறுத்த முடிவு

வேட்பு மனுவின் போது தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளிப்பவர்களை தகுதி நீக்கம் செய்ய சட்டம் இயற்றுமாறு சட்ட அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் வலியுறுத்த இருக்கிறது. தேர்தல் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இனி வரும் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களின்...

தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப முடியாது - தலைமை தேர்தல் ஆணையர்

தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.  டெல்லியில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அண்மையில் நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் மின்னணு...