​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு - சந்திரபாபு நாயுடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்தலில் பயன்படுத்துவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அமராவதியில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய சந்திரபாபு நாயுடு, டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் 15 அரசியல் கட்சிகளின்...

எம்எல்ஏ மரணமடைந்தால், அக்கட்சியின் மற்றொருவரை தேர்ந்தடுக்கலாம்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ஒரு தொகுதியில் எம்எல்ஏ மரணமடைந்தால் இடைத்தேர்தல் நடத்தாமல் அந்தக் கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தடுக்கலாமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. தாமோதரன் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் மனுஒன்றை  தாக்கல் செய்திருந்தார். அதில், ஒரு தொகுதியில் நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்து செய்வதாக...

நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் இணைத்து நடத்த வேண்டும் - வைகோ

 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் இணைத்து நடத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துக்கு இடம் தரக்கூடாது என்றும், ஆளும் கட்சிக்கு அனுசரணையாக இல்லாமல் நடுநிலையோடு செயல்படும்போதுதான்...

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் மனுதாக்கல்...

அரசு மற்றும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆணை

தமிழ்நாட்டில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடுகளை, தேர்தல்...

நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சவாலையும் சந்திக்கத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் எந்த சவாலையும் சந்திக்க தயார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.  குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து மக்களவையில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டியை வரவேற்பதாக கூறினார். தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க...

ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

தேர்தலின்போது ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்குகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக தேர்தல்...

டி.டி.வி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அதுகுறித்து 4 வார காலத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என கூறியுள்ளது. குக்கர் சின்ன வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், கே.எம்....

வரும் மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களிலும் ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்படும் - தேர்தல் ஆணையம் உறுதி

மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் 100 சதவீதம் ஒப்புகை சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகை சீட்டு கருவிகளை பொருத்த தேர்தல்...

உள்ளாட்சித் தேர்தல் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தி முடிக்கப்படும் - மாநிலத் தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலத் தேர்தல்...