​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவில் ஒலிம்பிக் தொடர்பான போட்டிகளை நடத்த முடியாது - ஒலிம்பிக் சம்மேளனம்

ஒலிம்பிக் தொடர்பான எந்த போட்டிகளையும், இனி இந்தியாவில் நடத்தப்போவதில்லை என ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்துள்ளது. புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த துப்பாக்கிசுடும் வீரர்கள் இருவருக்கு டெல்லிக்கு வந்து பயிற்சி போட்டிகளில் பங்கேற்பதற்கான விசாவை வழங்க இந்தியா...

பிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதி விருது..!

மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் மோடிக்கு தென்கொரிய அரசு சியோல் அமைதி விருது அளித்து கவுரவித்துள்ளது. தென்கொரிய அதிபரின் அழைப்பை ஏற்று அந்நாட்டில் இரு நாட்கள் சுற்றுப்பயணம்...

ராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி -நிர்மலா சீதாராமன்

மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் 424 தனியார் நிறுவனங்களுக்கு ராணுவ தளவாடங்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நடைபெறும் இந்திய விமான கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். இந்தியாவில்...

இந்திய எல்லையை தாண்டி நுழைந்த பாகிஸ்தான் பெண் துப்பாக்கி சூட்டில் காயம்

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஊருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தார். புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் இந்திய ராணுவம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் செக்டாரில் இந்திய...

ஜாக்குவார் கார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியவர்களுக்கு வலை

டெல்லியில் தொழிலதிபரை மிரட்டும் வகையில் அவர் ஓட்டி வந்த ஜாக்குவார் கார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். பிதம்புரா ((Pitampura))என்ற இடத்தில் வசித்து வரும் பிங்கி பாட்டியா ((Pinki Bhatia)) அரசு அனுமதியுடன் மதுபானக்கடைகளை நடத்தி வருகிறார்....

நைஜீரிய கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வடமேற்கு நைஜீரியாவில் இரு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி ஏந்திய கும்பல் வந்து சுட்டு வீழ்த்தியதில் பலர் உயிரிழந்தனர். சில இடங்களில் ஆங்காங்கே சடலங்களாகக் காட்சியளித்தன. இதையடுத்து...

துப்பாக்கியுடன் யார் வந்தாலும் சுட்டுக் கொல்வோம் - ராணுவம் அதிரடி

தீவிரவாதிகளுடன் 17 மணி நேரம் நீடித்த சண்டையில் பொதுமக்கள் உயிரிழப்பதைத் தவிர்க்க ராணுவத்தினர் கடும் உயிர்ச்சேதத்தை விலையாக கொடுக்க நேரிட்டதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் யாரையும் சுட்டுத் தள்ளுவோம் என்று இந்திய ராணுவ உயரதிகாரிகள் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை...

பாகிஸ்தான் எல்லையில் இருந்து கேஸ் சிலிண்டருக்குள் ஆர்.டி.எக்ஸ் கடத்தல், விசாரணையில் புதிய தகவல்கள்

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத பயிற்சி முகாம்களில் இருந்து வாங்கப்பட்ட 80 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை கேஸ் சிலிண்டருக்குள்ளும், நிலக்கரி சாக்குப்பைகளிலும் வைத்து தீவிரவாதிகள் இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயனங்கள் அடங்கிய வெடிப்பொருளை கடத்தி...

அமெரிக்க வாழ் இந்திய தம்பதி துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழப்பு

அமெரிக்க வாழ் இந்திய தம்பதி துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துவிட்ட நிலையில், கணவர் தன் மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஹோஸ்டனில் உள்ள சுகர் லேண்ட்-ல் வசித்து வந்த சாந்தி தமது வீட்டின் டிரைவ்...

ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத தலைமையை 100 மணி நேரத்தில் பழி தீர்த்துவிட்டதாக இந்திய ராணுவம் அறிவிப்பு

புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரத்திற்குள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமை காஷ்மீரில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், நேற்று 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த 3 பேரும் புல்வாமா தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என்றும்,...