​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விவசாய நிலத்தை சமன்படுத்தும் பணியின்போது ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விவசாயி ஒருவரின் நிலத்தை சமன் செய்யும் பணியின்போது 17 ஐம்பொன் சிலைகளும் சிலை பீடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பேரையூரைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்று வந்தன....

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவிவரும் நிலையில், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மழை கொட்டியது....

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை

தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், ராமநத்தம், ஆவினங்குடி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.   புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், விராச்சிலை, துலையானூர், ராயவரம், கடியாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் பொதுமக்கள்...

பொன்னமராவதி விவகாரத்தில் தொடரும் கைது நடவடிக்கைகள்-மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ் ஆப்  ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்னமராவதியில் ஒரு சமூகத்தினரை இழிவாகப் பேசி ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் வசந்த் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்த சத்யராஜ் என்பவரை வரவழைத்து...

திருமயம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பரளியில் மாட்டுவண்டி பந்தயம் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. அங்குள்ள அய்யனார் கோயில் திருவிழாவை  முன்னிட்டு நடந்த இந்த மாட்டுவண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் கலந்துகொண்டன. மாடுகள் பல்வேறு...

சிவராத்திரி உற்சவத்தில் மாட்டு வண்டி பந்தயம்

சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. திருமயம் அருகே உள்ள நெய்வாசல் திட்டாணிக் கருப்பர் கோவிலில், மஹா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.   இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், புதுக்கோட்டை...

மகாசிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டு வண்டிப் பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. திருமயம் அருகே அரண்மனைபட்டியில் உள்ள குருந்துடைய அய்யனார் கோவில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் 40...

பெட்டிக் கடையை காலி செய்யச் சொல்லி பெண்களுடன் வாக்குவாதம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பெட்டிக் கடையை அடித்து நொறுக்கும் சிலர், பெண்களையும் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. திருமயம் பைரவர் கோவில் அருகே வாசுகி என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாசுகியிடமே பொருட்கள் வாங்குவது, அருகே கடை வைத்துள்ள சிவராமன்...

வடிவேலவர் கோவில் மாசிமக உற்சவத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றன. கோனாப்பட்டு சேமநகர் வடிவேலவர் கோவில் 137வது மாசிமக உற்சவத்தை முன்னிட்டு இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மைதானத்தில் சீறிப் பாய்ந்து ஓடிய...

புதுக்கோட்டை மாவட்டம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மலையக்கோவிலில் நடத்தப்பட்ட இப்போட்டியில் திருச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து 520 காளைகள் களமிறக்கப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறி வந்த...