​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பட்டியல், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பட்டியல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் 24 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் பொன்.ராஜா,...

இருசக்கர வாகனம் ஓட்டும் போது குப்பை கண்ணை மறைத்ததால் விபரீதம்

சென்னை தாம்பரம் அருகே 50 அடி பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் நோக்கி கல்லூரி மாணவர்களான அஸ்வின் மற்றும் அவரது நண்பர் தினேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அனகாபுத்தூர் அருகே...

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவு

விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவடைந்ததையடுத்து அவர் மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஓய்வெடுக்க  மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவ முகாமை தாக்க ஏவுகணையை சுமந்து வந்த பாகிஸ்தான் எப்.16 போர் விமானத்தை விரட்டிச் சென்று...

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை அடுத்த தாம்பரம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 இளைஞர்களை, சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். மண்ணிவாக்கத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவரது சகோதரர் சண்முகம்...

சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தாதீர் - மயில்சாமி அண்ணாதுரை

சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் அழித்துவிடும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரம் தனியார் கல்லூரி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் பெற்றோர்...

சென்னையில் ரயிலில் தவற விட்ட பயணியின் பணத்தை பத்திரமாக ஒப்படைத்த போலீசார்

சென்னையில், ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 81 ஆயிரம் ரூபாயை மீட்டு போலீசார், அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். திருச்சி அன்பு நகரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்தார். தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், தன்னுடைய...

மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்த இளைஞர் வெட்டிக் கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்த இளைஞரை, ஐந்து பேருடன் அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தை சேர்ந்தவர் கணபதி. இருவருக்கும் உறவினரான பாலாஜி என்பவரின் மனைவி வனிதாவிற்கும் இடையே தவறான...

சென்னை - கொல்லம் ரயில் பெட்டியின் மீது மோதிய ரயில் இஞ்சின்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை பணிமனைக்கு எடுத்துச் செல்ல வந்த இஞ்சினின் பிரேக் பழுதாகி ரயிலின் மீது மோதியதில் அதன் ஒரு பெட்டி சேதமடைந்து தடம் புரண்டது. சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலானது காலை எழும்பூர் இரயில் நிலையத்தில்...

பர்னிச்சர் தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து

சென்னையை அடுத்த மாம்பாக்கம் அருகே பர்னிச்சர் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், இயந்திரங்கள் எரிந்து நாசமாயின. சென்னையைச் சேர்ந்த சேர்ந்த சத்தியமூர்த்தி, பாலாஜி என்ற இருவர் மாம்பாக்கம் அருகே கேளம்பாக்கம் - வண்டலூர்...

காவல்துறையினர் அமைத்த தடுப்பு வேலியால், விமானநிலையம் - கத்திப்பாரா இடையே நள்ளிரவில் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் கடந்து செல்லும் இடத்தில் வாகன சோதனை நடத்துவதற்காக போலீசார் அமைத்த தடுப்பு வேலியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமானநிலையத்தில் இருந்து வடபழனி செல்லும் சாலையில் கத்திப்பாரா மேம்பாலம் அருகில் சாலைத் தடுப்புகளை மிகவும் நெருக்கமாக...