​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டு விற்பனை

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டு விற்பனை, திருச்சி அருகே படுஜோராக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜீயபுரம், நெய்தலூர், அல்லித்துறை, சோமரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில்...

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்..!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  சென்னை எழும்பூரில் செயல்படும் மாநில மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியருக்கு தலா...

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  சென்னையில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெறும் தனியார் நிறுவனங்களின் பின்னனியை ஆராய வேண்டும், குற்ற பின்னனி உடைய தனியார் நிறுவனங்கள் பங்குபெற...

தேர்தலுக்காக சில அரசியல் கட்சிகளால் சாதிக் கலவரங்கள் தூண்டப்படுகின்றன - ஈஸ்வரன்

பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகளால் தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் தூண்டப்பட்டு வருவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டினார். தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொழிற்சங்கப் பிரிவுக்கான கொடியை ஏற்றிவைத்த ஈஸ்வரன், செய்தியாளர்களை...

10 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து, திமுக தொடர்ந்த வழக்கில்,மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம்...

இலங்கை அகதிகளை திரும்ப அழைக்க நடவடிக்கை

இலங்கை அகதிகள் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுத்து வருவதாக, டெல்லியில் உள்ள அந்நாட்டின் தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் அகதிகளில் 20 முதல் 30 சதவீதம் பேர் இந்தியாவிலேயே...

காவல்துறை அதிகாரிகள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு

தமிழகத்தில் கூடுதல் தலைமை இயக்குனர்களாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் 6 பேர், காவல்துறை தலைமை இயக்குனர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஜிபியாக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரிய ஊழல் கண்காணிப்பு துறை டிஜிபியாக ஸ்ரீலட்சுமி பிரசாத்தும், அசுதோஷ் சுக்லா சிறைத்துறை...

வங்க கடலில் இருந்து வீசும் காற்றால் தமிழகத்தில் குளிர் தொடரும்

காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இமயமலையின் மேற்கு பகுதி வளி மண்டலத்தில்...

பாஜகவினர் நாடாளுமன்றத்தில் அதிமுகவை ஆதரிக்கவில்லை-தம்பிதுரை

அதிமுகவுடன் உறவு வைக்க பாஜக விரும்புகிறது என்று கூறப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் 34 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த போது பாஜகவினர் ஏன் ஆதரவு அளிக்கவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய...

ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு தலைமைச்செயலாளர் அறிக்கை அளிக்க உத்தரவு

தமிழகத்தில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமைச்செயலாளர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 19 ஆயிரம் ஏரிகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும்,...